இலங்கை பிரதான செய்திகள்

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து  இன்று வெடிபொருட்கள் சில  மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பொருட்களில்  இரண்டு கைக்குண்டுகள் இரண்டு மிதிவெடிகள் , ஒரு கிளைமோர் மற்றும் ஷெல்  ஆகியன  அடங்குகின்றன. இவை வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

முன்னர்  இராணுவம் இருந்த குறித்த வீட்டின்  கிணற்றினை துப்பரவு செய்யும் போதே  இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.