ஈராக்கில் ஐ.எஸ். இயக்கத்தினர் குழந்தைகள் உள்பட மொத்தம் 15 பேரை கைது செய்து உயிரோடு எரித்து கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.எஸ். இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள அல் ஷஜரா கிராமத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றவர்களை கைது செய்து கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இனி யாராவது தப்பிக்க முயன்றால், அவர்களும் உயிரோடு எரித்துக் கொல்லப்படுவார்கள் எனவும் ஐ.எஸ். இயக்கத்தினர் மிரட்டல் விடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment