இலங்கை பிரதான செய்திகள்

லக்ஸ்மன் கிரியெல்லவின் கருத்துக்கள் அரசியல் சாசனத்தில் இதுவரை உள்வாங்கப்படவில்லை – ஜயம்பதி விக்ரமரத்ண:

அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறும் எந்தவொரு கருத்தும் அரசியல் சாசனத்தில் இதுவரையில் உள்வாங்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ண குறிப்பிட்டுள்ளார்.

ஜே.என்.பி.யின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசம்மில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என, லக்ஸ்மன் கிரியெல்ல கூறி வருவதாகத் தெரிவித்துள்ள நிலையில் ஜயம்பதி விக்ரமரத்ண அதனை மறுத்துள்ளார். அத்துடன் அடுத்த வாரம் அளவில் புதிய அரசியல் அமைப்பின் வரைவுத்திட்டம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ள அவர்> இத்தகைய கருத்து வெளிப்பாடுகளானது மக்களை திசை திருப்புவதற்கான முயற்சியாகும் எனவும் ஜயம்பதி விக்ரமரத்ண குற்றம் சுமத்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.