இலங்கை

சிறைச்சாலை வைத்தியர்கள் அனைவரும் இடமாற்றம்


சிறைச்சாலை வைத்தியர்கள் அனைவரையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில இடமாற்றம் செய்யுமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன உத்தரவிட்டுள்ளார். சிறைச்சாலைகளில் கடமையாற்றி வரும் வைத்தியர்கள் சிறைச்சாலை வைத்தியசாலைகளில் அரசியல்வாதிகளுக்கு விசேட சலுகைகள் வழங்கி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படும் அரசியல் கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலைகளில் போலியாக அனுமதிக்கப்பட்டு சலுகைகள் அனுபவிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்களின் காரணமாக சிறைச்சாலைகளில் கடமையாற்றி வரும் வைத்தியர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்

Add Comment

Click here to post a comment

Leave a Reply