நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பொறுப்பேற்கும் திட்டம் எதுவுமில்லை என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அவ்வாறு அமைச்சுப் பதவி ஏற்றுக்கொள்ளுமாறு எவரும் தம்மை கோரவுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள உள்ளார் என்று ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை தொடர்பில் ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது, அமைச்சு பதவியை பெற்றுக்கொள்வதிலும் பார்க்க கட்சியின் பணிகளில் பங்குபற்றுவது முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.
Add Comment