கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. பிள்ளையானுடன் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் ஆகியோருக்கு விளக்கமறியல் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Add Comment