இலங்கை

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை – கடற்படை


இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என கடற்படையினர் அறிவித்துள்ளனர். இந்திய மீனவர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முற்று முழுதாக நிராகரிக்கின்றோம் என  கடற்படை பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாகுலுகே  தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினர் நேற்றையதினம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த சம்பவத்தில் மேலும் மூன்று மீனவர்கள் காயமடைந்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான துப்பாக்கிச் சூடு சம்பவமோ அல்லது தாக்குதல்களோ இடம்பெறவில்லை என கடற்படைப்  பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap