இலங்கை

இந்து சமுத்திர பிராந்திய வலயத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்கு புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டும் – ஜனாதிபதி


இந்து சமுத்திர பிராந்திய வலயத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்கு புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்து சமுத்திர பிராந்திய வலய நாடுகள் இது தொடர்பில் ஓர் சட்டத்தை உருவாக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடற்கொள்ளை, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு ஆபத்துக்களை தவிர்ப்பதற்கு புதிய சட்டங்கள் வகுக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ள அவர் போதைப் பொருள் கடத்தலை தவிர்ப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டாலும் இன்னமும் முழு அளவில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தரப்புக்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply