கட்டாருக்கான தூதுவராக ஏ.எஸ்.பி லியனகே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல வர்த்தகரான லியனகே இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நியமனம் வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லியனகேவை கட்டாருக்கான தூதுவராக நியமிப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு உயர் பதவிகளுக்கான ஜனாதிபதிக்குழுவிற்கு கடந்த ஜனவரி மாதம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment