சுகாதார அமைச்சுப் பதவியிலிருந்து தன்னை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். மருந்தக நிறுவனங்களும், புகையிலை உற்பத்தி நிறுவனங்களும் இந்த முயற்சியை மேற்கொள்வதாக பயாகலவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினரும் இந்த சதித் திட்டத்தில் இணைந்து கொண்டுள்ளதாகவும் ஜே.வி.பி யையும் இந்த சதித் திட்டத்தில் இணைந்து கொள்ள முயற்சிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புகையிலை பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 100 பில்லியன் ரூபாவினை அரசாங்கம் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment