உலகம்

சிரியாவில் வன்முறையை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் – ஐ.நா


சிரியாவில் நடைபெறும் வன்முறையை கட்டுப்படுத்த ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து வன்முறையை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான சிரியத் தூதர் டீ மிசுத்ரா  வலியுத்தியுள்ளார்.

ஜெனீவாவில் பல்வேறு அரசியல் பேச்சுவார்த்தைகளின் மூலம் சிரிய வன்முறைகளை குறைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிற டீ மிசுத்ரா ,  ஐ.நா.வின் இந்தக் கோரிக்கையை ஏற்று வன்முறையை  கட்டுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பமாகும் ; என எதிர்பார்ப்பதாக மிசுத்ரா தெரிவித்துள்ளார்.

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக அந்நாட்டில் இருந்து பலரும் வெளியேறி வருகின்ற நிலையில் சட்ட விரோதமாக படகுகளில் புறப்பட்டு செல்லும் சிரிய நாட்டினர் பலர்  மத்திய தரைக்கடலில் மூழ்கி உயிரை விடுவதும் குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply