Home இலங்கையாழில், மாடுகளை லொறியில் ஏற்றி சென்றவர் கைது!

யாழில், மாடுகளை லொறியில் ஏற்றி சென்றவர் கைது!

by admin

சித்திரவதைக்கு உள்ளாக்கும் முகமாக மாடுகளை லொறியில் ஏற்றி சென்ற சாரதியை காவற்துறையினர் கைது செய்துள்ளதுடன் 10 மாடுகளையும் மீட்டுள்ளனர்.

நெடுந்தீவு பகுதியில் இருந்து 20 மாடுகளை படகு மூலம் , குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு கொண்டு வந்து அங்கிருந்து லொறியில் 20 மாடுகளையும் யாழ்ப்பாணம் ஏற்றி வந்துள்ளார்.
அதில் 10 மாடுகளை பண்ணை பகுதியில் இறக்கி அவற்றை விற்பனை செய்த பின்னர் மிகுதி 10 மாடுகளையும் லொறியில் ஏற்றி சென்ற வேளை யாழ்ப்பாண காவற்துறையினரால் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் லொறியில் இருந்த 10 மாடுகள் மற்றும் லொறியை பொலிஸ் நிலையம் எடுத்து சென்ற பொலிஸார், கைது செய்யப்பட்ட சாரதியை காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
லொறி ஒன்றில் 05 மாடுகளையே ஏற்றி செல்ல முடியும் எனவும் , அவற்றுக்கு மேலதிகமாக ஏற்றி சென்றமையால் விலங்குகளை சித்திரவதைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது/
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More