இந்த ஆண்டில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாது என தெரிவிக்கப்படுகிறது. அண்மைய நாட்களாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்த போதும் தற்போதைக்கு அமைச்சரவையில் மாற்றம் இருக்காது என அறிவி;க்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் மாற்றம் செய்தால் அரசாங்கத்திற்குள் குழப்ப நிலைமைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு என சிரேஸ்ட அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் செய்யும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில அமைச்சர்கள் தங்கள் வகிக்கும் பதவிகளை விட்டுக் கொடுக்க விரும்பாத காரணத்தினால் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளது.
Add Comment