இந்தியா

ஜபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 20 தொழிலாளர்கள் காயம்

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலமான ஜபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 20 தொழிலாளர்கள் காயமடைந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.   1942ம் ஆண்டு நிறுவப்பட்ட  ராணுவத்திற்கு சொந்தமான இந்த  தொழிற்சாலையில், வெடிபொருட்களின் மூலக்கூறுகள், ஷெல், துப்பாக்கி தோட்டாக்கள் என பல்வேறு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதுடன் வெடிமருந்து நிரப்பும் பணியும் இடம்பெறுகின்றது.

இந்த தொழிற்சாலையில் நேற்றுமாலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதால்  30க்கும் மேற்பட்ட குண்டுகள் வெடித்ததாலும் இதனால் தொழிற்சாலைக்குள் வேலை பார்த்துக்கொண்டிருந்த பலர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்ட தீயணைப்பு படையினர் தொழிற்சாலையில் இருந்து 20 பேரை காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply