இலங்கை

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிகாரம் கிடையாது – சம்பிக்க ரணவக்க


சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிகாரம் கிடையாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 19ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக நிறுவப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்கள் அர்த்தமற்றவையாக மாறி வருகின்றன என குறிப்பிட்டுள்ள அவர் சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலம் நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என பலர் கருதிய போதிலும் உண்மையில் அவ்வாறான ஓர் நிலைமை கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு காணப்பட்டாலும் தேர்தல் சட்டங்களில் மாற்றமில்லாத காரணத்தினால், ஆணைக்குழுவினால் செயற்பட முடியாத நிலைமை காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். கணக்காய்வு தொடர்பில் சுயாதீன ஆணைக்குழு காணப்பட்டாலும் பழைய சட்டங்களே  அமுல்படுத்தப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Add Comment

Click here to post a comment

Leave a Reply