வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் மரணித்துள்ளார். மோட்டார் வாகனமொன்றுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான நபரே இவ்வாறு மரணித்துள்ளார்.
சந்தேக நபர் கடந்த 8ம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட போது அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. உயிரிழந்தவர் 69 வயதான குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment