ஜெர்மனியில் துரக்கியப் பிரஜைகள் அந்நாட்டு உளவுப் பிரிவினரால் கண்காணிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பனை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள ஜெர்மனிய அரசாங்கம் ஜெர்மனிக்குள் வெளிநாட்டு உளவாளிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
ஜெர்மனியில் வாழ்ந்து வரும் துருக்கிப் பிரஜைகள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கண்காணிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஜெர்மனியின் சட்ட திட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வெளிநாட்டு உளவாளிகளுக்கு தேவையான வகையில் நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் ஜெர்மனிய உள்துறை அமைச்சர் Thomas de Maiziere தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment