ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதிமன்றம் விமல் வீரவன்சவின் பிணை மனுவை நிராகரித்துள்ளது. புதல்வி, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்ற இருப்பதனால் அவர் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவதனை தடுக்க பிணை வழங்குமாறு நீதிமன்றில் வீரவன்ச சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கனவே விமல் வீரவன்சவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. அரசாங்க சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 10ம் திகதி விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டு விளக்கமறயலில் வைக்கப்பட்டிருந்தார். பிணைவழங்கக் கோரி விமல் உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment