
பேராதனைப் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பிலான அறிவித்தல் சகல பீடங்களும் விடுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இனந் தெரியாத வைரஸ் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் சகல பீடங்ககளையும் தற்காலிகமாக மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை நாளை நண்பகலுக்கு முன்னதாக விடுதியை விட்டு வெளியேறுமாறும் பேராதனைப் பல்கலைகழக நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Add Comment