தேர்தல் திருத்தச் சட்டங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேர்தல் திருத்தச் சட்டங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, துறைசார் அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் திருத்தச் சட்டங்களை மேற்கொள்வதன் மூலம் துரித கதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment