இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் கஞ்சா மீட்பு


யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையினர்  நேற்றையதினம் ஒரு தொகுதி கஞ்சாவை மீட்டுள்ளனர்.  குறித்த கஞ்சாவானது பொதி செய்யப்பட்ட நிலையில் படகொன்றில் காணப்பட்டுள்ளது.

60 லட்சம் ரூபா பெறுமதியான மீட்கப்பட்ட கஞ்சாவினை கடற்படையினர் நெடுந்தீவு காவல்துறையினரிடம்  ஒப்படைத்துள்ளனர். குறித்த கஞ்சாவை  ஊர்காவற்துறை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply