உலகம்

சிரியாவில் பேருந்து மீது குண்டுத்தாக்குதல்


சிரியாவில் பேருந்து  மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டோ காயமடைந்தோ இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. சிரிய நகர் அலப்போ நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வாகனத் தொடரணியில் பயணித்த பேருந்து  மீது  தற்கொலை குண்டுதாரி ஒருவர் கார் ஒன்றை மோதச் செய்து வெடிக்கச் செய்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றிய தகவல்களை இதுவரையில் வெளியிட முடியவில்லை என சிரிய அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply