ஏழு கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கடத்த முயற்சித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ள இந்த தங்கம் தொடர்பில் கொழும்பைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து வந்த விமானமொன்றில் இலங்கைக்கு வந்த நபரிடமிருந்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த தங்கத்தை மீட்டுள்ளனர். பத்து கிலோ கிராம் எடையுடைய தங்கத்துடன் வெளிநாட்டு மதுபான போத்தல்களும் இவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
Add Comment