Home இலங்கைகணவன் சடலமாக மீட்பு – மனைவியும் உயிா் மாய்ப்பு

கணவன் சடலமாக மீட்பு – மனைவியும் உயிா் மாய்ப்பு

by admin

 

வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில், மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதான லோகநாதன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதனையடுத்து    அவரது மனைவியான  37 வயதான   பரமேஸ்வரி என்பவா்  நஞ்சருந்திய நிலையில்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.

நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியின் வீடொன்றில் சடலம் ஒன்று  காணப்பட்டமை தொடர்பாக நெடுங்கேணி  காவல்துறையினருனருக்கு  அறிவிக்கப்பட்டதனையடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற  காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

குறித்த தம்பதியர் இருவரும் முரண்பாடு காரணமாக சிலகாலங்கள் பிரிந்திருந்ததாக  தொிவிக்கப்படுகின்றது. கணவனின் தலையில் இரத்தக்காயம்   காணப்பட்ட நிலையில் இது கொலையாக இருக்கலாம் என்று   சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More