வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 115; பேர் தொடர்பான விபரங்கள் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று கையளித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் நடை பெறும் இடத்துக்கு கடந்த மாதம் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ண சென்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் கலந்துரையாடிய போது வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை வழங்குமாறும் தன்னாலான உதவிகளை செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் இன்று வட மாகாண சுகாதார அமைச்சரிடம் 115 பேரின் விபரங்களை கையளித்துள்ளனர். குறித்த விபரங்களை எதிர்வரும் 27 ஆம் திகதி சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் தாம் கையளிக்கவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
Add Comment