இந்தியா

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றமை தொடர்பில் டி.டி.வி.தினகரனிடம் 7 மணி நேரம் விசாரணை


இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக  50 கோடி ரூபா லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான வழக்கில், டி.டி.வி.தினகரனிடம் டெல்லி காவல்துறையினர்  7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையகம் முடக்கிய நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற, அ.தி.மு.க. அம்மா கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் 50 கோடி ரூபா பேரம் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இதுதொடர்பில் சென்னை வந்து டி.டி.வி.தினகரனை  சந்தித்த அதிகாரிகள்  விசாரணைக்காக சனிக்கிழமை நேரில் முன்னிலையாகுமாறு  தெரிவித்திருந்தார்கள். அதனை ஏற்று டெல்லி சென்ற  டி.டி.வி.தினகரனிடம் டெல்லி காவல்துறையினர்  7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

சுகேஷ் சந்திரசேகருக்கும், அவருக்கும் உள்ள தொடர்பு, பண பரிமாற்றம், தேர்தல் ஆணையகத்தில்; உள்ள அதிகாரிகள் யாருடனாவது தொடர்பு வைத்து இருந்தாரா போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு; விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்து.  இன்று  மீண்டும் அவர் இன்று மீண்டும் விசாரணைக்கு முன்னலையாகவுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply