இலங்கை

குப்பைகளை அகற்றுவது தொடர்பில் பாராளுமன்றில் இன்று விவாதம் :


பாராளுமன்றம் இன்றைய தினம் கூட உள்ளது. குப்பைகளை அகற்றுவது தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது. குறிப்பாக குப்பை அகற்றுதலை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதி பெற்றுக் கொள்ளும் நோக்கில் பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளன.

குப்பை அகற்றுவதனை தடுப்பவர்களை கைது செய்யுமாறு ஜனாதிபதி அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தரவிட்டிருந்தார். பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 17ம் சரத்தின் அடிபப்டையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டால் அது பத்து நாட்களுக்குள் பாராளுமன்றில் சமர்ப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் அடிப்படையிலேயே இன்றைய தினம் பாராளுமன்றம் கூட உள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply