சாவகச்சேரி சங்கத்தானை புகையிரத நிலையத்து அண்மையில் இன்று அதிவிரைவு புகையிரதத்துடன் இராணுவ வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவிரைவு புகையிரதத்துடனேயே இராணுவ வாகனம் மோதியுள்ளது.
காயமடைந்த இராணுவத்தினர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment