இலங்கை பிரதான செய்திகள்

இலங்கைக்கான பயணம் மிகவும் முக்கியமானதும் நினைவில் நிற்கக் கூடியதுமாக அமைந்திருந்தது – நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். இரண்டு நாள் பயணமொன்றை மேற்கொண்டு பிரதமர் மோடி நேற்று இலங்கைக்கு வந்திருந்தார்.  இன்று மாலை தனது இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியன் எயர்லைன்ஸ் விமான சேவையின் விசேட விமானமொன்றின் மூலம் பிரதமர் நாடு திரும்பியுள்ளார்.

பிரதமர் மோடி நாடு திரும்பிய போது, இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று அவரை வழியனுப்பி வைத்துள்ளார். இலங்கைக்கான பயணம் மிகவும் முக்கியமானதும் நினைவில் நிற்கக் கூடியதுமாக அமைந்திருந்தது என பிரதமர் மோடி இலங்கை பயணத்தை முடித்துக் கொள்ள முன்னதாக தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.