கட்சி விதிகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மாகாணசபை உறுப்பினர்கள் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப் பின்நிற்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் சில மாகாணசபைகளின் உறுப்பினர்கள் மாகாணத்தில் சுயாதீனமாக இயங்குவதற்கு முயற்சிக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
வலஸ்முல்ல பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ள அவர் தற்போதைய அரசாங்கத்தை தூய்மையான ஓர் அரசாங்கமாக மாற்றும் முனைப்புக்களில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாகவும் அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment