இன்று 15-05-2017 கிளிநொச்சி மத்திய மாகவித்தியாலயதிற்கு முன்னால் கயஸ் வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பி உள்ளார். குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சி திருநகர் பகுதியில் இருந்து ஏ9 வீதி ஊடாக இரணைமடு நோக்கி சென்றுகொண்டிருந்த போது வீதியை குறுக்கறுத்து சென்ற நாயினை விலத்தி செல்ல முற்பட்ட வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதிலையே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது
குறித்த விபத்தில் வாகனம் பெரும் சேதங்களுக்கு உள்ளானதுடன் விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
Add Comment