இலங்கை மலையகம்

புஸ்ஸல்லாவையில் 6 தோட்ட தொழிலாள பெண்கள் குழவி தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி


புஸ்ஸல்லாவை டெல்டா தோட்டம் தெற்கு (பழைய தோட்டம்)  பிரிவில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாள பெண்கள் மீது இன்று (19) காலை  குழவி தாக்கியதில் 20பேர்  பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 06 பெண்கள் புஸ்ஸல்லாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில்   03 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பி உள்ளனர்

குறிப்பாக மலைக தோட்ட தொழிலாளர்கள் மீது தற்போது அடிக்கடி இந்த குழவி தாக்குதல் நடைபெற்று வருவதால் தொழிலாள பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்திற் கொண்டு மலையகத்தில் தேயிலை மலைகளில் காணப்படும் அனைத்து குழவி கூடுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கபட்ட மக்கள்  கோரிக்கை விடுக்கின்றனர்

Add Comment

Click here to post a comment

Leave a Reply