இந்தியாவின் உத்தரகாண்டில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவால் சுமார் பதினைந்தாயிரம் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தரகாண்ட் மாநிலம் விஷ்ணுபிரயாக் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் பத்ரிநாத் செல்லும் பாதை முற்றிலும் சேதமடைந்துள்ளது எனவும் இதனால் விஷ்ணுபிரயாக் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கி கொண்டுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Add Comment