இலங்கை பிரதான செய்திகள்

பெலாரஸிடமிருந்து இராணுவ தளவாடங்களை கொள்வனவு செய்வது குறித்து இலங்கை கவனம்


பெலாரஸிடமிருந்து இராணுவ தளவாடங்களை கொள்வனவு செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை இராணுவ மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க தற்போது பெலாரஸிற்கு  சென்றுள்ளார்.  பெலாரஸில் நடைபெறும் மிலெக்ஸ் 2017 ( MILEX 2017 )  கண்காட்சியில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு சென்றுள்ளார்.

வோல்ற்ஸ் (waltz) ரக இராணுவ வாகனங்கள் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்வது பயனுள்ளதாக அமையும் எனவும் மேஜர் ஜெனரல் குலதுங்க தெரிவித்துள்ளார்.  ராணுவ தளவாடங்களை நவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பெலாரஸின் இராணுவ தளவாடங்களை இலங்கை படையினர் ஏற்கனவே பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers