இலங்கை

பொருளாதார பின்னடைவிற்கு ரவி கருணாநாயக்கவை மட்டும் குற்றம் சுமத்த முடியாது – ஜீ.எல்.பீரிஸ்


தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார பின்னடைவு மற்றும் நிதிப் பிரச்சினைகள் அனைத்திற்கும்  முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவே காரணம் என கூற முடியாது என கூட்டு எதிர்க்கட்சியின் பேச்சாளர் ஜீ.எல்.பீரிஸ்  தெரிவித்துள்ளார்.

ரவி கருணாநாயக்கவை பலிக்கடாவாக்கி அரசாங்கம் அனைத்து பிழைகளிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முயற்சிப்பதாக தெரிவித்துள்ள அவர் ரவி கருணாநாயக்க மீது குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் காணப்படுவதனை தடுக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரவி நிதி அமைச்சராக செயற்பட்ட காலத்தில், திறைசேரி தொடர்பான பொறுப்புக்கள் பிரதமரிடமும், வங்கிகள் தொடர்பான பொறுப்பு கபீர் ஹாசீமிடமும் வழங்கப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ள அவர் மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகள் தொடர்பிலான பொறுப்பு ரவி கருணாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளுக்கு பொறுப்பு இன்றி கல்வி அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கு நிகராகவே ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக செயற்பட்டார் என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply