காணாமல் போன மீனவர்கள் மட்டக்களப்பிற்கு திரும்பியுள்ளனர். சில மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த மீனவர்கள் தற்போது வீடு திரும்பியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 19 மீன்பிடிப் படகுகளில் சென்றவர்கள் இவ்வாறு காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீனவர்கள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து கடற்படையினர் தேடுதலில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்கள் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment