அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் 111 க்கான பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவிருந்த குறித்த பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் 111 க்கான பரீட்சைக்காக நாடுமுழுவதுமிருந்து 93ஆயிரத்து 952 பரீட்சார்த்திகள் தோற்றவிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இப் பரீட்சைக்காக நாடு முழுவதிலும் 658 மத்திய நிலையங்களில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன .
Add Comment