பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கைது செய்யப்படுவதனை, அரசியல் பிரமுகர் ஒருவர் தடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஞானசார தேரரை கைது செய்ய நான்கு காவல்துறை குழுக்கள் கடந்த வாரம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவினால் இந்த காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன, மத வன்முறையை தூண்டும் வகையில் செயற்படுவதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், ஞானசார தேரர் கைதாவதனை உயர் அரசியல்வாதியொருவர் தடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment