இமாசலபிரதேச மாநிலத்தில் நேற்று இடியுடன் கூடிய கனமழை காரணமாக தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனமழையுடன் பலத்த புயல் காற்றும் வீசியதனால் அங்கு உள்ள பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாகவும் பல இடங்களில் பயங்கரமான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் தொழிற்சாலை ஒன்றின் மிகப்பெரிய சுவர் இடிந்து விழுந்ததில் தொழிற்சாலைக்குள் தூங்கிக்கொண்டிருந்த ஊழியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
மீட்பு படையினர் மீட்புபணியில் ஈடுபட்டுள்ள நிலையில் 8 பேரில் உடல்களை எடுத்ததாகவும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment