சவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்தப்படுமென ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளமையை தொடர்ந்து அங் பாதுகாப்பு பலபபடுத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ஐஎஸ் தீவிரவாதிகள் உரிமை கோரிய தாக்குதலில், 17 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த நிலையில், அடுத்ததாக, சவுதி அரேபியாவிலும் தாக்குதல் நடத்தப்படும் என வீடியோ மூலம் ஐஎஸ் தீவிரவாதிகள்; மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஆதில் ஈரானுக்கு பின்னர் உங்களுக்கான நேரமும் வரும். உங்களை, உங்கள் இடத்திலேயே வந்து தாக்குவோம் என அவர்கள் மிரட்டல் மிரட்டல் விடுத்துள்ளனர். அத்துடன் தாங்கள் யாருடைய முகவர்களும் இல்லை எனவும் இறைவனுக்கு கட்டுப்பாட்டு, அவருடைய உத்தரவின் பேரில் நடப்பதாகவும் மதத்திற்காகவே போராடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Spread the love
Add Comment