இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

ஹஜ் பயண ஏற்பாடுகளும் ஹஜ் கட்டணமும் ஓர் ஆய்வு:- இலங்கை ஹஜ்ஜும் நீதி மன்றப் படிகளும் ஒரு பார்வை:-

இலங்கை ஹஜ் கட்டணம் பற்றிய பார்வைக்குள் செல்வதற்கு முன், ஹஜ் என்ற இஸ்லாமிய கடமை என்பது ஒருவரின் மீது எந்த அடிப்படையில் விதியாகின்றது என்பதை அறிந்து கொள்ளுதல் சாலச் சிறந்தது.

இவ்வாறு அறிந்து கொள்வதன் மூலம், தான் சம்பாதித்த ஆகுமான பொருளாதாரத்தை ஆகுமான முறையில் செலவளித்தல் என்ற கோட்பாட்டு விளக்கம் பூரணப்படும். ஹஜ் என்பது பொருளாதாரம், உடல் ஆரோக்கியம் மிக்கோருக்கான கடமை. இதில் பொருளாதார வசதி படைத்தோர் என வகைப்படுத்தப்படுபவர்கள் யார்? என்பது மிக முக்கியம்.

உதாரணமாக மாதாந்த சம்பளத்திற்கு ஸகாத் கடமையாகும் ஒருவர் தனது வருமானத்தில் அடிப்படை மாத செலவுகள் போக எஞ்சிய பணத்திற்கு ஸகாத் கணிக்க வேண்டும். ஆகவே இங்கு மாதாந்த செலவு என்பது அவரின் வாழ்க்கைத் தரம், குடும்ப நிலை என்பவற்றின் அடிப்படையில் அமைந்த அவரது சூழலில் பொதுப்படையாக நிலவும் ஒரு குறிப்பிட்ட தொகை . அதை இன்னுமொருவர் நிர்ணயம் செய்ய முடியாது.

அதே போன்றே பாவிக்கும் நகைகள் தவிர்ந்த ஏனைய நகைககளுக்கு தான் நகைக்காக ஸகாத் கடமையாகும் . இங்கு பாவனைக்கான நகைகளின் அளவு என்பது ஆளுக்காள், வாழும் சூழலுக்கு சூழல் வேறுபடும். ஆகவே ஒருவரை நோக்கி ஒருவர் குறை காண முடியாது.

இந்த ஒப்பீட்டாய்வு அடிப்படையின் இறுதியான முடிவாக, சமூகத்தில் நிலவும் பொதுத்தன்மை மற்றும் தமக்கு விதியாகப் போகின்ற விடயத்தின் இடம், நாம் வாழும் சூழல், தமது வாழ்க்கை தரம், தேவை, மற்றும் தனது குடும்ப நிலமை என்பவற்றை கொண்டே நாம் ஒரு விடயத்தின் மீது கடமையாகின்றோமா?இல்லையா? என்பதை நிர்ணயிக்க வேண்டும். அவ்வாறே ஹஜ்ஜும் கடமையாகும்.

அதாவது, ஹஜ் என்பது சவூதி என்ற செல்வந்த நாடு சென்று, அந்நாட்டு தரங்களுடன் அமைந்த ஹோட்டல்களில் தமது வாழ்க்கை தரத்தோடு ஓரளவு ஒத்துப்போ​கும் ஹோட்டல்களை தேர்வு செய்து அவற்றின் கட்டணங்களைப் பொருந்தி , மேலும் ஹஜ்ஜுக்காக சவூதி ,இலங்கை அரசாங்கங்ள் அறவிடும் ஏனைய உட்கட்டமைப்பு கட்டணங்களையும் செலுத்துமளவுக்கு யாருக்கு பொருளாதார வசதி உள்ளதோ அவருக்கு ஹஜ் கடமை ஆகும்.

ஹஜ் என்பது சவூதி என்ற நாட்டில் இருக்கும் மக்கா நகரில் நிறைவேற்றப் பட வேண்டிய விடயம்; மேலும் அந்த சவூதி அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்றாற் போல் ஏனைய நாட்டு அரசாங்கங்கள் மூலமாகவே யாத்திரிகர்கள் அவர்களது நாட்டுக்குள் பிவேசித்து அந்த ஹஜ் வணக்கத்தை மேற்கொள்ள முடியும் என்ற அவர்களின் immigration law அடிப்படையிலான ஹஜ் பயண பொறிமுறைகள் சவூதி அரசால் உலக நாடுகளுக்கு வழி நடாத்தப் படுகிறது. அதன் அடிப்படையில் இது வரை காலமும் அரச அங்கீகாரம் பெற்ற முகவர்களினூடாகவே இலங்கை அரசாங்கமும் இந்த ஹஜ் பயணத்தை நெறிப்படுத்துகிறது. இதற்கமைவாக பார்ப்பதாயின், ஹஜ் கடமையான ஒருவர்,. தான் முஸ்லிம் என்ற ஒற்றைக் காரணத்திற்காக ஹஜ் என்ற வணக்கத்தை தனியே சென்று நிறைவேற்றுவது என்பது சாத்தியமன்று.

மேலும் சவூதி அரேபியாவில் நிலவும் நிகர ஹோட்டல் கட்டணம், அவர்கள் அறவிடும் ஹஜ் உட்கட்டமைப்பு வசதிக்கான நிகர கட்டணம் [ முஅல்லிம் (சவூதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர்கள்) -rates], ஹஜ் வரி என்பவற்றை கீழ் வரும் வலைத் தளங்களில் தேடிக் கொள்வதன் மூலம் அவற்றின் நிகர பெறுமானங்களை அறிந்து கொள்ள முடியும்.

http://www.arabnews.com/node/952366/saudi-arabia / http://qsaudi.com/low-cost-hajj-packages-in-saudi-arabia-for-year-2015/ / http://www.millathhajservice.com/haj-itenary.html மேலும் விமான டிக்கட்டின் வெளிப்படைத்தன்மையை airlines மூலமோ அல்லது air ticket agency கள் மூலமாகவோ அறிந்து கொள்ள முடியும்.

ஆகவே இன்னும் விரிவாக சொல்லுவதாயின்,
நிகர விமான டிக்கட் கட்டணம் , 2)நிகர சவூதி ஹோட்டல் கட்டணங்கள் , 3)உணவுக்கான செலவீனம், 4) நிகர முஅல்லிம் 5)சவூதி அரசின் ஹஜ் வரி 6)இலங்கை அரசின் எனைய கட்டணங்கள் (அரசின் அறவீடுகள்/ அரச அங்கீகாரம் பெற்ற முகவர்களின் சேவை தொகை ) அடங்கிய மொத் கூட்டுத் தொகை பெறுமானத்தை எவர் ஒருவர் தமது ஹலாலான சம்பாத்தியத்தின் மூலம் பெற்றுக்கொள்கின்றாரோ அவருக்கு ஹஜ் என்பது கடமையாக மாறும்.”

மதாந்த செலவுகள் போக எஞ்சியவற்றுக்கு ஸகாத் கொடுக்க வசதி இல்லையெனில் எவ்வாறு தமக்கு ஸகாத் கடமையில்லையோஅவ்வாறு மேற்கூறப்பட்ட பொருளாதார வசதி அற்ற ஒருவருக்கு ஹஜ் விதியாவதில்லை. வாழ்நாளில் ஒரு முறையாவது ஸகாத் கொடுக்க முயற்சிக்க தமது உழைப்பு வருமானத்தை கூட்டிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.அது போல ஹஜ் ஜுக்காகவும் தம்மை தயார் படுத்திக் கொள்ள தமது பொருளாதாரத் தகமையை பெருக்கிக் கொள்ள வேண்டும். அப்போதே ஹஜ் என்பது கடமையாக மாறும்.

மேலும் அனைத்துக்கும் காரண காரியங்களை வேண்டி நிற்கும் இன்றைய சூழ் நிலையில் இலங்கை ஹஜ் மற்றும் அவற்றின் செலவுகள் பற்றிய தெளிவின்மை மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்றமையினால் வீணான தர்க்கங்களும ஹஜ் முகவர்கள் பற்றிய எதிர்மறை எண்ணங்களும் மிக இலகுவாக விதைக்கப்படுகின்றன. மேலும் சில முகவர்களின் உளத் தூய்மையற்ற போக்கும் அவற்றுக்கு காரணம் என்பது மறுப்பதற்கு இல்லை.ஆகவே இந்த ஹஜ் பயண எற்பாட்டு முறைமை அவற்றின் செலவீனம் எவ்வாறு அமைகின்றது என்பதை விளக்கமாக புரிந்து கொண்டால் தேவையில்லாத தப்பெண்ணங்களை களைவதோடு அதனை தோற்றுவிப்பவர்களின் எண்ணங்களையும் புரிந்து கொள்ள முடியும்.

அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் சவூதி அரசாங்கம் மூலம் ஹஜ் பயண ஏற்பாட்டை மேற்கொள்ளும் முறை
MRCA மூலம் அரச அங்கீகாரம் பெறும் முகவர்கள் தமக்கு திணைக்களத்தால் கிடைக்கப் பெறும் license ஐ எடுத்துக் கொண்டு ஹஜ் பயண ஏற்பாடுகளை மேற்கொள்ள சவூதி செல்வர். சவூதியில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தில் தமது license ஐ உறுதிப்படுத்திய பின்னர் முஅல்லிம் தெரிவு மற்றும் தங்குமிட ஏற்பாடுகள் என்பவற்றை தேடி பெற்கொள்ள மக்கா மதீனா செல்வார்கள். மேலும் அவற்றுக்கான கட்டணங்களை முழுவதுமாக செலுத்தியதன் பிற்பாடு தமக்கு கிடைக்கும் booking certificate களை சவூதி ஹஜ் அமைச்சில் சமர்ப்பித்த பின் bar code stickers எனப்படும் பற்றுச் சீட்டு முறைமை ஒவ்வொரு யத்திரிகர் வீதம் வழங்கப்படும். அவ்வாறு கிடைக்கப் பெற்ற மறு கணத்திலிருந்து ஒரு யாத்திரிகர் தனது ஹஜ் பயண ஏற்பாட்டை cancel செய்வாராயின் அவரது பணம் முஅல்லிம்களால் மீளளிக்கப்படாது என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.

பின் அதனை எடுத்துக் கொண்டு இலங்கை வரும் முகவர்கள் airlines அல்லது air ticket agency களிடம் முற்பதிவு செய்து வைத்திருக்கும் உரிய தினதில் அமைந்த tickets களை முழுப் பணம் செழுத்தி பெற்றுக் கொள்வர்.பின்னர் தமக்கு கிடைக்கப் பெற்ற bar code sticker களை ஒவ்வொரு ஹாஜியின் கடவுச்சீட்டிலும் ஒட்டி திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பபர்கள். பின்னர் அவை இலங்கையிலிருக்கும் சவூதி embessy க்கு வீசா பதிவுக்கு அனுப்பி மீண்டும் பெறப்பட்டு முகவர்களுக்கு கையளக்கப்படும்.

மேலும் ஹாஜிகளுக்கான உணவு ஏற்பாடுகளுக்காக இலங்கை cook களை முகவர்கள் சவூதி அழைத்துச் செல்கின்றனர். ஹஜ் காலங்களில் மக்கா நகர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக hotel களில் சமைப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். ஆகயால் மக்கா மற்றும் மதீனாவில் சமைப்பதற்காக என்று பிரத்தியேக இடங்கள் முகவர்களால் வாடகைக்கு அமர்த்தப்படுட்டு ஹாஜிகளுக்கான உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றன..

அது போன்றே ஹாஜிகள் தமது ஹஜ் வணக்கத்தை தெளிவுடன் மேற்கொள்ள மெளலவிமார்களை தமது ஹஜ் குழுவில் உள்ளடக்கியிருக்க வேணடும் என்ற திணைக்கள விதி முறைக்கமைவாக ஒவ்வொரு முகவர்களும் தமது ஒவ்வொரு 50 ஹாஜிக்கு ஒரு மெளலவி வீதம் அழைத்துச் செல்கின்றனர்..

மேற்குறிப்பிடப்பட்ட சவூதியில் நிகழும் ஹஜ் ஏற்பாடுகளான முஅல்லிம் மற்றும் hotels booking என்பவற்றைப் பற்றி இன்னும் விரிவாக அறிந்து கொள்வதன் அங்கு அமையப் போகும் ஹஜ் பயண ஒழுங்கை அறிந்து கொள்ள முடியும்.

1 முஅல்லிம்
சவூதி அரசாங்கம் தமது நாட்டுக்கு வரும் யாத்திரிகர்களுக்கு நேர்த்தியான சேவகளைவழங்கும் பொருட்டு உலக நாடுகளின் பிராந்தியங்கள் அடிப்படையில் முஅல்லிம் என்ப்படும் அரச அங்கீகாரம் பெற்ற பிரதி நிதிகள் அல்லது முகவர்களை ஆண்டு தோறும் தெரிவு செய்கின்றனர்.

ஒரு யாத்திரிகர் சவூதி விமான நிலையத்தில் enter ஆகி ஹஜ்ஜை முடித்துக் கொண்டு மீண்டும் விமான நிலையம் செல்லும் வரையான முழு பொறுப்பையும் முஅல்லிம்களே ஏற்றுக் கொள்கின்றனர்.

மேலும்,ஹஜ்ஜுடைய நாட்களில் அதாவது பிறை 7 முதல் 13 வரையான நாட்களில், ஹாஜிகளுக்கான மினா மற்றும் அறபா தங்குமிடம் ,உணவு ஏற்பாடுகள் என்பவற்றை வழங்குவதோடு கீழ் வரும் போக்குவரத்து வசதிகளையும் வழங்குவதும் முஅல்லிம்களின் பொறுப்பாகும்.
1)jeddah airport -to- makkah hotel 2) makkah hotel -to-mina hut 3) mina hut -to- arafath hut 4) mina hut -to- makkah hotel 5) makkah hotel -to-madhina hotel 6) madhina hotel -to- jeddah airport)

இந்த ஒழுங்கு வரிசை முகவர்கள் பயணிக்கும் ஹஜ் முறைமைக்கு அமைவாக முன்னுக்கு பின் மாறுபடும்.
மினா தங்குமிடத்தை பொறுத்தவரை, சவூதி அரசால் முஅல்லிம்களுக்கு certain mechanism மூலம் hut களை அமைக்க மினாவில் உள்ள இடங்கள் பகிர்ந்தளிக்கப்படும் . ஜம்ராத்திற்கும் – hut க்கும் இடப்பட்ட தூரம் குறையும் போதே இலாபம் சம்பாதிக்க முடியும் என்பதனால் மினா இட ஒதுக்கீடுகளை பெற்றுக் கொள்ள அவர்களுக்குள் பெரும் போட்டியும் உருவாகும். இந்த தூரமே அவர்களின் கட்டண அறவீட்டில் பாரிய பங்கு வகிக்கிறது.

மேலும் அறபாவிலிருந்து பிறை 9 சூரிய மறைவுக்கு முன் முஸ்தலிபா சென்று ,அங்கு சில மணித்தியாலங்கள் தரித்து நிற்பது ஹஜ்ஜின் கடமைகளில் ஒன்று . போக்குவரத்து வசதிகளை பொறுப்பேற்கும் முஅல்லிம்கள் இந்த அறபா—முஸ்தலிபாவுக்கான போக்குவரத்திற்கு bus வசதி செய்து கொடுப்பதில்லை என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். ஆனாலும் முகவர்கள் பெரும்பாலானோர் ஹாஜிகளின் செளகரியத்தை கருத்திற் கொண்டும் சூரிய மறைவுக்கு முன் அறபாவிலிருந்து வெளியாகி முஸ்தலிபா செல்ல வேண்டும் என்பதாலும் அறபா எல்லைகளில் park செய்யப்பட்டிருக்கும் bus களை அதன் drivers களுக்கு பணம் கொடுத்தும் ஏனைய முகவர்களோடு அடித்து பிடித்தும் ஒதுக்கிக் (occupy) கொள்கின்றனர். இவை மினாவிலிருந்து அறபாவுக்கு ஹாஜிகளை ஏற்றி வந்த முஅல்லிம் பஸ் வண்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வாறு அந்த பஸ் வண்டிகளை அடைந்து கொள்வதற்கு ஹாஜிகளின் இடைத்தொடர்புகள் (coordination ) மிக முக்கியம்.

அடுத்து பிறை 10 அன்று சூரியன் உதயமானவுடன் முஸ்தலிபாவிலிருந்து மினா ஜம்ராத்துக்கு செல்லும் போதும் முஅல்லிம்கள் bus வழங்குவதில்லை.இதற்கு ஒரு தீர்வாக கடந்த வருடங்களில் musthalifa-to- mina train service சவூதி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதன் 250 றியால் மேலதிக கட்டணம் என்பதனையும் விடுத்து அதன் பாவனை முறை ,அதன் நெரிசல் தன்மை என்பவற்றின் காரணமாக பெரும்பாலானோர் அதனை தவிர்ந்து கொள்கின்றனர்; மாறாக காலங்காலமாக கால் நடையாக செல்லும் முறையே பின்பற்றப்படுகிறது.

2. சவூதி ஹோட்டல்களின் வியாபார முறை
சவூதி ஹோட்டல்கள் துல் கஃதா மற்றும் துல்ஹஜ் மாதத்தை 3 வகையாக பிரித்தே ஹஜ்ஜுக்கான தங்குமிட விலையை அறவிடடுகின்றன.

(I) முஃஸம்;- துல்ஹஜ் பிறை 1 -16 வரை மக்கா ஹோட்டலில் தங்குதல் (அவ்வாறே ஹஜ்ஜுடைய நாட்களில் ( பிறை 7 தொடக்கம் 13 வரை) ஹஜ்ஜையும் முடித்துக கொண்டு பின்னர் மதீனா சென்று அங்கு 10 நாட் கள் தங்குதல்;பின்னர் அங்கிருந்தாவாறு ஜித்தா விமான நிலையம் சென்று நாடு திரும்புதல்.

இந்த வகையலான ஹஜ் முறையில் ஹோட்டல் விலையில் பெரும்பாலும் பேரம் பேசி விலைக்கழிவைப் பெறுவது மிகக் கடினம் ; ஆகவே இதன் கட்டணம் மிக அதிகம் ,அவ்வாறே குறைந்த விலைக்கு பெற்றாலும் அந்த ஹோட்டல்கள் தரத்தில் குறைந்ததாகவே அமையும்

(II) அவ்வல் மதீனா:- துல் ஹஜ் பிறை 1 வரக்கும் முந்திய நாட்களுக்கான மக்கா மதீனா hotal ( துல் கஃதா இரண்டாம் வாரம் அளவில் மக்கா சென்று அங்கு 10 நாட்களும் பின்னர் மதீனா சென்று 10 நாட்களும் தங்குதல். இறுதியாக ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக துல்ஹஜ் பிறை 7க்கு முன் மக்காவின் 3 km தொலைவிலுள்ள அஸீஸியா என்ற இடம் திரும்புதல். பின்னர் ஹஜ்ஜைப் பூர்த்தி செய்து விட்டு மீண்டும் அஸீஸியா வந்து பின்னர் ஜித்தா விமான நிலையம் செல்லுதல்.

**(III)ஆகிர் மதீனா:-துல் ஹஜ் பிறை 16க்கு பிந்திய நாட்களுக்கான hotels ( துல் ஹஜ் பிறை 1 பின் நேரடியாக அஸீஸியா சென்று அங்கிருந்தவாறு உம்றாவை முடித்துக் கொண்டு பிறை 7 இல் ஹஜ்ஜுக்காக மினா செல்லுதல்.பின் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு மீண்டும் அஸீஸியா வந்து பின் மக்கா ஹோட்டலில் 10 நாட்கள் தங்குதல்.

இறுதியாக மதீனா சென்று அங்கும் 10 நாட்கள் தங்கிவிட்டு பின்னர் ஜித்தா விமான நிலையம் செல்லல்.-

– அஸீஸியாவில தங்கும் வழமையின் காரணம்–

இதில் கடைசி இரு (அவ்வல்/ஆகிர்) முறைகளிலும் ஹஜ்ஜுக்கான ஏற்பாடுகளை செய்யும் போது முறையே துல்ஹஜ் பிறை 5-7 மற்றும் 13- 15 அஸீஸியாவில் தங்குவது தவிர்க்க முடியாத தாக அமைகின்றது ஏனெனில் முஃஸம் முறையிலான ஹஜ்ஜுக்கே பிறை 1 -16 வரை ஹோட்டல்கள் விற்பனை செய்யப்படுவதால் அஸீஸியா இல் தங்கும் வழமை பின்பற்றப்படுகிறது.. அவ்வாறு அஸீஸியவில் தங்காமல் பிறை 1 -16 வரை க்குமான நாட்களிலும் மக்காவிலே தங்க வேண்டுமாயின் முஃஸம் முறையில் தான் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வேஏண்டும். முஃஸம் முறையில் ம்ட்டுந்தான் ஹஜ் பயணம் செல்வதாக இருந்தால் ,, இலங்கை மக்களின் ஹஜ் யாத்திரிகை எண்ணிக்கை கணிசமான முறையில் வீழ்ச்சி அடையும். ஏனெனில் பிறை 1-16 வரையான கால பகுதியில் சவூதி ஹோட்டல்கள் அறவிடும் கட்டணங்கள் என்பது,சாதாரண நாட்களை விட 5 மடங்கு அதிகம்.

ஆகவே எமது நாட்டு மக்களின் பொதுமைப்படுத்தப்பட்ட பொருளாதார வசதியின் அடிப்படையில் சவூதி ஹோட்டல் கட்டணங்களை எமது மக்களால் effort பண்ண இயலுமாமை அமைந்தால் மாத்திரமே ஹஜ் என்ற வணக்கம் கடமையாக அமையும் என்ற காரணியால் ஹஜ் கட்டணத்தை ஓரளவு பொருந்திக் கொள்ள கூடிய முறையில் குறைகப்பதற்காக இந்த அஸீஸியாவில் தங்கும் வழமை இலங்கை ஹஜ் முகவர்களால் இது வரையான காலமும் கையாளப் படுகிறது. இதற்கு திணைக்களமும் அங்கீகாரம் வழங்கி அந்த முறைமையில் 4 நாட்களுக்கு மேல் அஸீஸியாவில் தங்க கூடாது என்ற கட்டாய விதிப்பை ஹாஜிகளின் செளகரியம் கருதி விதித்திருக்கின்றது. இருந்தாலும் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று ஹஜ் ஓட்டல் booking system திற்கு அமைவாக 15 நாட்களுக்கான கட்டணத்தை ஹோட்டல்கள் அறவிடுகின்றன என்பதனால் அஸீஸியாவில் தங்கும் நாட்கள் 4 ஆக இருப்பினும் 15 நாட்கள் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்..
இது வரை ஹஜ் பயண ஏற்பாடுகளை விளங்கிக் கொண்ட நாம் அவற்றின் ஒவ்வொரு பொறிமுறைகளிலும் செலவாகும் செலவீனங்களின் தன்மை பற்றி அறிந்து கொள்வோம்.

Hotels—
இலங்கைக்கான கோட்டா 2800 என்பதால் இந்திய இந்தோனேசிய நாடுகளின் லட்சக்கணக்கான கோட்டாக்களோடு ஒப்பிடுகையில் ஒரு சிறிய தொகை. ஒப்பீட்டளவில் அவ்வாறு சிறு தொகை கோட்டாவைப் பெற்ற இலங்கை முகவர்கள் இறுதி நேரத்தில் மக்காவுக்கு booking செய்ய சென்று அங்குள்ள தரகர்களின் உதவியுடன் hotels களிடம் பேரம் பேசி 5000 -15,000 SR வரை விலை நிர்ணயிக்கப்பட்ட ஹோட்டல்கள்களை 1000 – 2500 sr என்ற விலைக்கு bargain செய்கின்றனர்.இறுதி நேரம் என்பதாலும் கையிலிருப்பில் எஞ்சியிருக்கும் சிறு தொகை rooms களை பெரிய தொகை யாத்திரிகர்கள் எண்ணிக்கை கொண்ட பிற நாட்டு முகவர்களுக்கு வழங்க முடியாது என்பதாலும் bargain விலைகளுக்கே கொடுத்தும் விடுகின்றனர்.

Muallim- சவூதி அரசாங்கம் ஹஜ்ஜின் போது முஅல்லிம்கள் வழங்கும் சேவைகளைப் பொறுத்து 7வகையான பிரிவுகளாக பிரித்துள்ளதை arab news பத்திரிகையில் காணக் கூடியதாயிருந்தது. http://life-in-saudiarabia.blogspot.com/2016/06/prices-for-7-categories-of-hajj-fixed.html?m=a அதற்கமைய முஅல்லிம்கள் தங்களின் 3000- 8000 sr வரைக்குமான கட்டணங்களை 1000- 3500 sr வரை குறைத்து அவர்களின் எஞ்சிய இடங்கள நிரப்பிக் கொள்கின்றனர்.

ஒருவாறாக பேரம் பேசி குறைந்த விலையில் தமது booking ஐ பூர்த்தி செய்த முகவர்களை, தங்களின் கொள்வனவு விலையையே ஹாஜிகளிடம் அறவிட வேண்டும் என்று கோருவது அபத்தம் என்பதை business minded என்ற பெயர் எடுத்த முஸ்லிம் மக்களாகிய நாம் அறிவோம்.ஆனால் இதனை புரியாதவர்களாக படித்தவர்களும் நிர்வாகத் துறையில் இருப்பவர்களும் எம் சமூகத்தில் உள்ளனர் என்பது கவலையே.

உதாரணமாக 1kg anchor பெட்டியின் விலையை அந்த anchor company 600 ஆக நிர்ணயித்து பெட்டியில் அச்சிட்டுருக்கின்றது.அந்த anchor பெட்டியயை தமக்கு தெரிந்த sales rep ஊடகவோ அல்லது அந்த company இல் வேலை செய்யும் ஊழியரூடாகவோ அவர்களுக்கு மட்டும் என்றமைந்த விலைக் கழிவில் 400 lkr வுக்கு தாம் வாங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். அதை இன்னொருவருக்கு 580 lkr இறகு விற்றால் அது குற்றமாகும் அல்லது அது அநியாயம் என்று கூறுவது முறையற்றது போன்றது தான் அவ் வகையான argumentகள்.

இனி 2016 ஆம் ஆண்டின் படி அமைந்த ஹஜ் கட்டணத்தை கூறுகளாக பிரித்து அதன் செலவீனங்க அறிந்து ளைகொள்வோம்—
கீழ் வரும் கட்டணங்கள் இன்றைய சூழலுக்கும் அதனோடு ஒத்த வாழ்க்கை தரத்திற்கும் ஏற்றாற் போல் minimum and maximum கட்ணத் தொகைகள் கணக்கிடப்பட்டுள்ளன;

அதற்கமைய minimum கட்டணங்களை விடவும் குறைவான ஹோட்டல் எனின் பெரும்பாலும் மோசமான தரத்தையும் ஹறத்திலிருந்து வெகு தூரமாகவும் அமைந்திருக்கும்;;maximum கட்டணத்திற்கு அதிகமான ஓட்டல்கள் பெரும்பாலும் அதி கூடிய செளகரியத்தையும் ஹறத்திற்கு மிக அருகாமையிலும் அமைந்திருக்கும் என்பவற்றையும் கருத்திற் கொள்வோம்.

minimum (ஆக குறந்தது 5,6,7,8 கட்டில்களுடைய அறைகள். ஹறத்திற்கு 1500m க்குள் அமையப் பெற்ற ஹோட்டல்கள்)
maximum (ஆக கூடியது 4,5, கட்டிலகளுடைய அறைகள்.ஹறத்திற்கு 500 க்குள் அமைய பெற்ற ஹோட்டல்கள்.

மக்கா தங்குமிடம்.. min900 – max2500
மதீனா தங்குமிடம்.. min900 – max2500
அஸீஸியா தங்குமிடம். min700 – max2000
முஅல்லிம் min900- max3500
ஹஜ் வரி. 1050
சாப்பாடு. 40* 30. 1200

TOTAL 5650 SR – 12,750 SR
(with the EXCHANGE RATE of 39/-LKR)
(direct Air tickets 1,25,000/- LKR )//// (transist air tickets 1,05,000/- LKR)
Air ticket ஐ பொறுத்த மட்டில் , சாதாரண நாட்களில் 45-55 ஆயிரம் ரூபா வரையில் நிலவும் கட்டணம் ஹஜ் seaseon இன் போது அதிகரிக்கப்படுவது வழமையான விடயம். அதற்கமைய கடந்த வருட டிக்கட் விலை 1 லட்சம் தொடக்கம் 1 லட்சத்து ,25 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டது.

இக் கட்டணங்களுக்கான சேவைகள் categorized and limited ஆக எக் காலத்திலும் இருப்பதால் availability மற்றும் முகவர்களின் முந்திக் கொள்ளும் ஆற்றல்களுக்கு ஏற்றவாறு கொள்வனவு செய்வார்கள். இருப்பினும் எல்லா சேவைகளயும் தனியே ஒரு முகவர் மாத்திரம் அவற்றின் ஆக குறைந்த விலையில் கொள்வனவு செய்வது என்பது இயலாது,மாறாக ஒரு முகவர் மக்கா தங்குமிடத்தை ஆக குறைந்த விலையில் பெற்றால் மதீனா ஹோட்டல் எப்படியும் அதிகரித்த விலைக்கே பெறுவர். ஆகவே எல்லா முகவர்களாலும் ஆக குறைந்த கட்டணத்தைக் கொண்ட எல்லா சேவைகளையும் பெறுவது என்பது நடக்காத காரியம் என்பதால், மேற்கூறப்பட்ட சவூதி செலவீனங்களின் மத்திம தொகைக்கு ( middle amount ) அமைவாக கணக்காய்வு செய்வது ஓர் நிகர ஹஜ் கட்டணத்தை அறிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.

இவற்றுக்கமைய ஆக குறைந்தது 5650 SR தொடக்கம் அதி கூடிய தொகயான 12,750 SR வரையான சவூதி செலவீனங்கள் இலங்கை ரூபா படி 2,20,350/- தொடக்கம் 4,97,250/- LKR வரை காணப்பட்டது.அதனோடு விமான டிக்கட்களின் விலையான 1,25,000/- LKR ஐ கூட்டினால் ஆக குறைந்த basic ஹஜ் கட்டணமாக 3,45,350 LKR உம் ஆக கூடிய basic ஹஜ் கட்டணமாக 6,22,250 LKR ஆகவும் அமைந்தன.

மேற்குறிப்பிடப்பட்ட கட்டணங்கள் பற்றிய ஆய்வுகளையும் அதனோடு அமைந்த குற்றச் சாட்டுகளையும் அலசும் போது இலங்கை ஹஜ் முகவர்கள் சம்பந்தமாகவும் ஹஜ் கமிட்டி பற்றியதுமான பரஸ்பரக் குற்ற்ச்சாட்டுகளின் உண்மைத் தன்மையயை விளங்கிக் கொள்ள முடியும்.

முகவர்கள் தெரிவின் போது திணைக்களத்தால் முகவர்கள் மீது நிர்ப்பந்திக்கப்படும் போது கீழ் வரும் licenses களுக்கான அரசாங்க கட்டணங்கள் அவற்றை புதிப்பிக்க தேவப்படும் documentation charges மற்றும் இவற்றுக்கான deposits செலவுகள் மேலும் அவற்றின் மூலம் இயல்பாகவே நிர்ப்பந்திக்கப்படும் requirements களான 4000 sq ft office room கள் , epf etf செலுத்தப்பட வேண்டிய குறைந்தது 2 office staff போன்ற விடயங்களுக்கான ஆகக் குறைந்த ஆண்டு செலீனங்களை பின்வருமாறு பட்டியலிடலாம்.

1) tourist board license -35,000/- with the deposit of 120,000/-LKR
2) aviation license -35,000/- with the deposit of 2,50,000/- LKR
3) minimum 15,000/-LKr of office rental *12 months – 1,80,000/-LKR
4) minimum 10,000LKR bill of electricity ,water and communications for an office maintainance *12 months – 1,20,00/-LKR
5) minimum salary of 10,000/- & 15,000/- paid office staffs * 12 months – 300,000/-LKR
6) other office maintaining & documental expenses 3000*12 months -30,000/-
7) registration fee paid to MRCA -25,000/-
8) fee for allocated pilgrim per head -2000/-

இவற்றின் அடிப்படையில் மேற்கூறப்பட்ட செலவீனங்களின் கூட்டு தொகை 7 இலட்சத்தி 27 ஆயிரம் ரூபாய்கள் ஆகும்.இது சிற்றூர்களில் இயங்கும் முகவர் ஒருவரின் செலவீனம் ஆகயால் இதுவே ஆக குறைந்த ஆண்டு செலவீனம் ஆகும்.கநகர்ப் புறத்தை அண்டி அமைந்த முகவரெனில் அவரின் maintainance செலவு இரட்டிப்பு அதிகமாகும்.

எனவே குறிப்பிட்ட ஆண்டுக்கான இந்த minimum investment இன் மூலம் முகவர்கள் merchandize ஆக்கள்ப்பட்டுள்ளனர் என்பது புலப்படும். இதன் விளைவாக அக் கட்டணங்களை ஹாஜிகளின் கட்டணத்தின் மூலமே முகவர்கள் அறவிடுவர் என்பது இயல்பானது.
இலங்கையின் மொத்த 2800 கோட்டாக்களக்குமாக தெரிவு செய்யப்பட்ட 96 ஹஜ் முகவர்களால் அந்த 2800 என்ற கோட்டா எண்ணிக்கையயை பிரிக்கும் போது ஒரு முகவருக்கான moderate allocation ஆக 29 கோட்டா அமையும். அதனடிப்படையில் 29 கோட்டா பெற்ற முகவர் தலா 25 000/-ரூபா வீதமான ஆக குறைந்த அறவீட்டை ஹஜ்ஜுக் கட்டணத்தில் சேர்த்து அறவிடுவார்கள்.
ஆகவே மேற்கூறப்பட்ட basic ஹஜ் கட்டணத்துடன் இந்த அறவீட்டையும் சேர்த்தால் ஆக குறைந்த கட்டணம் 3,70,000/- ஆகவும் ஆகவும் கூடியது 6,47,000/- ஆகவும் அமையும்.

மேலும் ஹஜ்ஜின் போது உரிய முகவர் உரிமையாளர் தனது குழுவோடு பயணித்தல் மற்றும் ஹாஜிகளின் வழிகாட்டுதலுக்காக ஒவ்வொரு 50 ஹாஜிகளுக்கு ஒரு மெளலவி வீதம் அழத்துச் செல்லல் என்பன MRCA வினால் முகவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டாய வழிமுறை ஆகும். மேலும் ஹாஜிகளுக்கு இலஙகை முறையிலான உணவு வழங்கப்பட வேண்டும் என்பதனால் இலங்கை cook களையும் முகவர்கள் அழைத்துச் செல்கின்றனர். இதனால் ஏற்படும் செலவீனங்களாலும் ஹஜ்ஜுடைய கட்டண்ணம் கணிசமான அளவில் மேலும் உயர்வடைகின்றது.மேலும் இந்த ஹஜ் பிரயாணத்தை இலகுபடுத்த சவூதி அரசால் இலங்கைக்கு வழங்கப்படும் bessa எனப்படும் priviledged visa முகவர் உரிமையாளருக்கு மட்டும் கிடைப்பதனால் அவருடைய செலவீன்ம் மிக குறைவாக அமையும் .அதாவது விமான டிக்கட் ,சாப்பாடு செலவுகள் மற்றும் muallim கட்டணம் அடங்கலாக கிட்டத்தட்ட 200,000/-LKR மாத்திரமே..

மேலும் moulavi cook என்போரை ஒரு முகவர் தமக்கு கிடைக்க பெற்றிருக்கும் கோட்டவுக்குள்ளேயே சேர்த்துக் கொள்ள நிர்ப்பந்திக்க படுவதால்,அவர்களுக்குரிய செலவீனம் என்பது ஒரு ஹாஜிக்கான barcode sticker ஐ use பண்ணுவது போலானது.அதாவது அவர்களுக்காக சவூதியில் செலவாகும் அனைத்து செலவீனங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அது மட்டு மில்லாமல் அவர்களுக்கான மாத சம்பளமாக தலா 3000SR அதாவது 1,20,000/-LKR வீதம் மொத்தம் 2,40,000/- LKR வழங்கப்படுகிறது moulavi /cook செலவு ஆக குறந்தது 3,70,000/- *2 =7,40,000/- + அவர்களின் salary 2,40,000/- இவற்றின் கூட்டு தொகை 9,80,000/-LKR ஆக கூடிய து 6,47,000/- *2 = 12,94,000/- + அவர்களின் சம்பளம் 2,40,000/- இவற்றின் கூட்டு தொகை 15,34,000/-LKR
இவை 50 பேர் கொண்ட குழுவின் செலவீனம் ;ஆகவே moderate allocation 29 பேர் கொண்ட குழு எனில்; மேற்கூறப்பட்ட கூட்டு தொகயயை 50 இனால் வகுத்து வரும் தொகை ஒரு ஹாஜி மீது உரித்தாகும் அறவீடாகும். அதனடிப்படையில் , ஆக குறைந்தது தலா 19,600/- LKR உம் ஆக் கூடியது 30,680/-LKR உம் ஆகும்.

மேலும் உரிமயாளரின் செலவீனமான 2,00,000/-LKR ஐ moderate allocation 29 ஆல் வகுக்கும் போது வரும் 7000/- LKR தொகையயையும் அதனோடு சேர்த்தால் ஆக குறைந்தது 27,600/- LKR ஆகவும் 37,680/-LKRஆகவும் அமையும் இறுதியாக இத் தொகையினை , ஹஜ் கட்டணங்களோடு சேர்க்கும் போது சராசரியாக ஆக குறைந்தது 4,00,000/- ஆகவும் ஆக கூடியது 6,85,000/- ஆகவும் ஹஜ் கட்டணம் அமையும்.மேலும் மக்கள் பொருந்திக் கொள்ளும் ஒரு முகவரின் profit ஆக குறந்தது தலா 50,000/- ரூபாவையும் அதனோடு சேர்த்தால் ஆக குறந்த கட்டணமாக 4,50,000/- ரூபய்களும் ஆக் கூடிய கட்டணமாக 7,35,00/- ரூபய்களுமாக அமையும்.

இருந்தாலும் எல்லா முகவர்களாலும் ஆக குறைந்த கட்டணத்தைக் கொண்ட எல்லா சேவைகளையும் பெறுவது என்பது நடக்காத காரியம் என்பதால், மேற்கூறப்பட்ட சவூதி செலவீனங்களை ஒரு மத்திம தொகைக்கு ( middle amount ) அமைவாக கணக்காய்வு செய்வஒருதன் மூலம் 5,80,000/-LKR என்ற நிகர தொகையயை ஹஜ் கட்டணமாக அறிந்து கொள்ளலாம். மேலும் இதனோடு மிக அண்மித்த rates கள் ( குறைந்தது 5 ,25 லட்சத்திலிருந்து கூடியது 6.25 லட்சம்) தான் இலங்கை நாட்டு மக்களுக்கு போதுமான செளகரியத்துடன் கூடிய தமது வாழ்க்கைதரத்திற்கும் கிட்டத்தட்ட நெருங்கிய தங்குமிடங்களாகவும் ஒரு தரமான முகவர் சேவையை வழங்க கூடியதாகவும அமையும்.
குறிப்பு: இந்த கணிப்பு 2016ஆம் ஆண்டு நிலவிய 39LKR saudi exchange rate படி அமைந்த கட்டணம் ,2017ஆம் ஆண்டுக்கான சவூதி றியால் exchange rate 42 /- ரூபாவாக இருப்பதனால் இவ் வாண்டுக்கான கட்டணம் 20,000/- ரூபாவல் அதிகரிக்க இயலும் என்பதனையும் கருத்தில கொள்க.

மேலும் ஹாஜிகளை முகவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் தரகர் தொழிலை கிராமங்கள் மற்றும் ஊர்கள் தோறும் தங்களை மெளலவிகளே அன்று தொட்டு இன்று வரை நடைமுறையிலுள்ளது.இதன் மூலம் ஒரு ஹாஜி அங்கீகரிக்கப்பட்ட முகவர நேரடியாக தெரிவு செவது என்பதல்லாமல் brokers களே முகவர்களை தேர்வு செய்யும் நிலை நடை முறையிலுள்ள்து. ஒரு ஹாஜிக்கு தலா 20, 000 இலிருந்து 30,000 வரையான தரகுப் பணமும் அவர்களால் அறவிடப்படுவதால் ஹஜ் கட்டணத்தில் தவிர்க்க முடியாத பங்கை இந்த broker fee கொண்டுள்ளது என்பதனையும் மக்கள் விளங்கி கொள்ள வேண்டும்.

பிற நாடுகளின் கட்டணமும் இலங்ஙை ஹஜ் கட்டணமும்–
கடந்த கால வாழ்க்கைச் செலவை விட இவ்வருட செலவுகள் நம் வளர்ந்து வரும் நாட்டின் சமூகவுடமை பொருளாதார கொள்கைக்கு ஏற்றாற் போல் அதிகரித்துக் கொண்டே செல்லும் .மேலும் ஹஜ்ஜுக்கான செலவு என்பது சவூதி அரேபியா என்ற செல்வ செழிப்புள்ள ஏகாதிபத்திய நாட்டில் நிகழ்கின்ற விடயம் என்பதனால் அதன் செலவுகள் நமது நாட்டுடன் ஒப்பிடுவது அந்நியமே. நமது அண்டை நாடான இந்தியாவைப் பொறுத்தமட்டில் அரசினூடான மானிய முறையிலும் , தனியார் முகவர்கள் ஊடாகவும் ஹஜ் பயண ஏற்பாடுகள் மேற் கொள்ளப்படுகின்றன.

இந்திய தனியார் முகவர்களின் கட்டணம் 3.50 இலிருந்து 6 லட்சங்களாக காணப்படுகிறது, அதாவது இலங்கை நாணயப்படி 8,75,000/- இல் இருந்து 15 லட்சங்கள். ;மேலும் நிபந்தனைகளுடன் கூடிய [ air ticket மற்றும் அஸீஸியா தங்குமிடம்( without makkah madhina accommodations ) , அடங்கலான] அரச மானிய விலை ஆக குறைந்தது 1,85,000 இந்திய ரூபாய்கள் இல் இருந்து ஆர்ம்பிக்கின்றது.அதாவது 4,65,000/- இலங்கை ரூபாவிலிருந்து ஆரம்பிக்கின்றது.

மேலும பங்களாதேஷை பொறுத்தமட்டில் 8000 டொலர்களாகவும் பாகிஸ்தானில் 6 லட்சம் ரூபாய்களாகவும் காணப்படுகிறது.
ஏற்கனவே குறிப்பிட்டது போல் இந்த ஹஜ் கட்டணங்கள் என்பது சவூதி அரேபியாவில் செலவிடப்படும் செலவீனம் எனபதாலும இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கை போன்ற நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை பெரும்பாலும் ஒத்திருப்பதாலும் இந்த நாடுகளில் நிலவும் கட்டணங்கள் எமது நாட்டு ஹஜ் கட்ணங்களில் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது. ஆகவே இந்த ஒப்பீட்டாய்வின் அடிப்படையில் “ஹஜ் விதியாவதற்கான பொருளாதார வசதி” என்ற ஷரத்தை தெளிவான் முறையில் கணித்துக் கொள்ளலாம் .

மேலும் அமெரிக்க பிரித்தானிய மற்றும் பிற செல்வந்த நாடுகளில் நிலவும் ஹஜ் கட்டணமானது 14 நாட்கள் பயணத்திற்கு ஏறக் குறைய 8- 10 ஆயிரம் டொலர்களாக அறவிடப்படுவதை எமது வாழ்க்கைத் தரத்திற்கு ஒவ்வாது என்பதால் அவற்றை நம் நாட்டோடு பொருத்திப் பார்க்க இயலாது.

இது ஏலவே குறிப்பிட்டது போன்று மேலே சொல்லப்பட்ட கட்டணங்கள் இன்றைய சூழலுக்கும் அதனோடு ஒத்த வாழ்க்கை தரத்திற்கும் ஏற்றாற் போல் கணக்கிடப்பட்டுள்ளன.ஆகவே எமது அதே வாழ்க்கை தரத்தை கொண்ட எமது அண்டை நாடான இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகில் அறவிடும் 10- 15 இலட்சம் இலங்கை ரூபா பெறுமதியான ஹஜ் கட்டணத்தை விட இலங்கை தனியார் முகவர்களின் கட்டணம் ஒப்பீட்டறளவில் அரை வாசி என்பதை புரிந்து கொள்ளலாம் .அதிலும் ஒரு படி மேலாக இந்திய அரசின் நிபந்தனைகளுடன் கூடிய (ம்க்கா மதீனா hotels அற்ற )மானிய ஹஜ் விலையான min 4,60.000/- என்ற தொகையயை ஓரளவு ஒத்ததாகவே காணப்படுகிறது.
இதை விட கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ ஒரு முகவர் அறவிடுவார் எனில் அதில் ஏதோ சேவைக் குறைப்பு அல்லது ஏமாற்று வேலைகள் நடை பெற வாய்ப்பு மிக அதிகம் என்பதை கடந்த கால வரலாறுகள் பறைசாற்றுகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹாஜிகளைப் பொறுத்தவரை
நடுநிலமையான தங்களால் முயற்சிக்க கூடிய கட்டணத்தை தெரிவு செய்வதே சாலப் பொருத்தம்.
தனி அறைகள் business class tickets போன்ற சொளகரியங்களை விரும்புபவர்கள் அவர்களின் வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்றாற் போல் கட்டணங்களை தெரிவு செய்வது அவரவர் உரிமை , இதில் தனது தரத்திற்கு உயர்வாக சென்றால் இஸ்ராப் ஆக அமைவதோடு தனக்கு வசதி இருந்தும் மலிவு விலையை நாடுவது கஞ்சத் தனமாகவும் அமையலாம். ; இதனை அவர் அவரே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
— இலங்கை ஹஜ்ஜை MRCA வினால் மேற்கொண்டால் —

இதனை வைத்துப் பார்க்கும் போது இலங்கை தனியார் முகவர்கள் இலாப நோக்காக மட்டுமே இந்த ஹஜ் சேவைகளை வழங்கி இலாபம் சம்பாதிக்கின்றனர் என்ற குற்றச் சாட்டை வைக்கும் ஹஜ் கமிட்டி சேவை நோக்காக ஹஜ் வழங்க முன் வருவார்களாக இருந்தால்
4,50,000/- தொடக்கம் 7,30,000/- வரையான ஹஜ் கட்டணம் வெகுவாக வீழ்ச்சியடைந்து அனைத்து வசதிகளும் அடங்கலான ஹஜ் கட்டணமாக ( மக்கா/ மதீனா/ அஸீஸியா/air ticket/ tax food / முஅல்லிம் )3,45,000/- ரூபா ஆக அமையும் .இது இந்திய அரசின் மானிய விலையை முவிட குறைந்த தொகையாகும்.

ஆனால் இந்திய அரசு செய்வது போல் மக்கா தங்குமிடம் இல்லாது அஸீஸியா தங்குமிடத்தை மாத்திரம் கொண்டிருப்பின் 2,85,,000/- ரூபாவாகவும் Without food எனில் 2,40,000/- ஆகவும் ஒரு மாத காலஹஜ் பயணத்திற்கான கட்டணம் அமைய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

——ஹஜ் கமிட்டி பற்றிய விமர்சனம்——
இவ்வாக்கத்தின் மூலம் இலங்கை ஹஜ் முகவர்கள் ஒப்பீட்டளவில் மிக குறைவான விலையில் தமது ஹஜ் பயண ஏற்பாட்டை மேற்கொள்கிறார்கள் என்பதை போதுமான விளக்கத்துடன் அறிந்து கொண்ட நாம் ஹஜ் கட்டணக் குறைப்புகள் பற்றிய அமைச்சரினதும் ஹஜ் கமிட்டியினதும் அறிக்கைகளை பத்திரிகைகளில் பார்த்த வண்ணம் உள்ளோம்.

இலங்கை ஹஜ்ஜுக்கு பொறுப்பனவர்கள் என்ற வகையில் இலங்கை மக்களுக்கு சேவை செய்து கொண்டிருப்பதான ஒரு விம்பம் மட்டுமே இவ் வறிவுப்புகள் சுட்டி காட்டிக் கொண்டிருக்கின்றன என்பதனையும் இதனால் புரிந்து கொள்ளலாம். மேலும் இவ் வறிவுப்புகள் மூலம் பாமரர்கள்,படித்தவர்கள் பேதமின்றி ஹஜ் முகவர்களை எதிர் மறை எண்ணத்தில் பார்க்கத் தொடங்கியதன் வெளிப்பாடே இககட்டுரை என்பதை மீள் பதிவு செய்கின்றேன்.

போக்குவரத்து ,உணவு தங்குமிடம் போன்ற செலவுகளுக்கு யாரிடம் பணம் உள்ளதோ அவர்களுக்கு தான் ஹஜ் கடமை என்ற அல் குர் ஆன் வசனத்தை மேற்கோள் காட்டிய இந்திய நீதி பதிகள் 2022 ஆம் ஆண்டளவில் இந்திய மானிய ஹஜ் முறைமையயை இல்லாதொழிக்க இந்திய ஹஜ் கமிட்டிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனல் இலங்கை ஹஜ் கமிட்டியும் அதிகார்த்தில் இருப்பவர்களும ஹஜ் விலயயை குறைக்க வேண்டும் ,எளியவர்களும் ஹஜ்ஜுக்கு செல்லவ வேண்டும் என்ற இஸ்லாத்துக்கு முரணான வாதங்களை சமூகத்தில் விதைப்பதனால் மக்களை குழப்பி அரசியல் ஆதாயங்களை அடையப் பார்க்கின்றார்கள்.

மேலும் ஹஜ் யாத்திரைக்கு உதவி வழங்கி அதனை இலகுபடுத்த priviledged visa ( bessa ) அல்லது VIP visa என்ற வீசாக்கள் சவூதி அரசால் எல்லா நாடுகளுக்கும் வழங்குவது போல் இலங்கைக்கும் வழங்குகின்றது. இவ்வாறு கிடக்கும் 170 bessa க்களில் ஹாஜிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கென்ற பெயரில் doctors for hajj medical mission , ஹஜ் கமிட்டி அங்கத்தவர்கள் , மற்றும் திணைக்கள உத்தியோகத்ர்கள் செலரும் சவூதி செல்கின்றனர். இது பாராட்டத்தக்கது என்றாலும் அங்கு வரும் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஹஜ் முகவர்களை குற்றம் பிடிப்பதற்கென்றே flight ஏறி சவூதி செல்கின்றோம் எனும் எண்ணத்தில் அமைந்த அவர்களின் நடவடிக்கை அருவருக்க தக்கது. ஏதோ தாங்கள் தான் அரசாங்கம் என்ற எண்ணத்தில் ஹாஜிகள் தங்கியிருக்கும் ஹொட்டல்கள் சென்று hajj evoluation எனும் பெயரில் அவர்களிடம் முகவரைப் பற்றிய குறையை சொல்லுங்கள் என்று ஹாஜிகளிடம் கேட்பது வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பது போல் உள்ளது. இதனால் அதிருப்தியுற்ற ஹாஜிமார்களும் அதிகம்.

மற்றும் அமைச்சர்களுக்கு poster ஒட்டியவர்கள், அரசியற் பின்புலதையுடையவர்கள், போன்றோருக்கும் இந்த வீசாக்களை கொடுத்து அவர்களை ஹஜ் mission என்ற பெயரில் அவர்களையும் ஹஜ் பயணத்தில் இணைத்துக் கொள்ளூம் துஷ்பிரய்யோகத்தையும் இந்த ஹஜ் கமிட்டி மேற்கொள்கின்றது. 96 முகவர்கள் maximum 20 பேர் போதுமான ஹஜ் கமிட்டி வைத்தியர்கள் திணக்கள உத்தியோகத்தர்கள் குஉ என்பவற்றுக்கான bessa 120 போக எஞியிருக்கும் 50 bessa க்களை முகவர்களுக்கு பகிர்ந்தளித்தால் அதில் மெளலவி cook போன்றோரை accommodate செய்து கொள்வர். இதனால் ஹாஜிகளின் மீது மேலதிகமாக விதிக்கப்படும் அற்வீடும் கணிசமான அளவில் குறைந்து கட்டண குறைப்பு ஏற்பட சாத்தியம் அதிகம். ஆனால் இவ்வகை வீசாக்களை அரசியல்வாதிகளுக்கு ஒதுக்குவதும் அதை விற்பனை செய்து பணம் சம்பாதிப்பதுமே இது வரை காலமும் வாடிக்கையாகி இருந்து வருகிறது.

அது மட்டுமில்லாமல் இந்த வீசாக்களில் இலவசமாக செல்லும் இவர்கள் ,சவூதி தங்குமிடங்களில் ஹஜ் முகவர்கள் தங்களது ஹாஜிகளுக்காக ஏற்பாடு செயது வைத்திருக்கும் சாப்பாடு தேநீர் சிற்றுண்டிகள் ஐ இலவசமாக நுகர்வது (முகவர்கள் இலவசமாக தந்தாலும் கூடட), gift என்ற அடிலபடையில் shoppings ஈச்சம் பழம் பெற றுக் கொள்வதது போன்ற நடவடிக்கையானது மிகவும் இழிவான செயல்களாக இருக்கின்றது, இதற்கு பெரும்பாலான மார்க்கம் படித்தவர்கள்,மற்றும் நிருவாக பொறுப்பில் உள்ளவர்களும் விதிவிலக்கில்லை என்ற கசப்பான் உண்மையயையும் குறிப்பிட வேண்டும். இதனை கீழ் வரும் ஹதீஸின் அடிப்படையில் எந்த வகையில் நோக்குவது என்பதை அவரவர் தீர்மானித்துக் கொள்ளட்டும்.

“”ஸகாத் வசூலிப்பதற்கு நியமுக்கப்பட்ட ஸஹாபி ஒருவர் அவரால் வசூலிக்கப்பட்ட ஸகாத் தொகையில் தனக்கு பரிசாக கிடைக்கப் பெற்றதாக கூறி குறிப்பிட்ட தொகையை அவர் மொத்த ஸகாத் தொகையிலிருந்து எடுத்துக் கொண்டார். அதற்கு நபியவர்கள் அந்த குறிப்பிட்ட ஸஹாபிக்கு ” அவர் ஆமில் பதவியை துறந்து விட்டு சாதாரணமாக வீட்டில் இருந்து கொள்ளட்டும் , பிறகு அவருக்கு அந்த பரிசுத் தொகைகள் வருகின்றனவா என்று பார்ப்போம் எனக் கூறி செய்தி அனுப்பி அதை ஹறாமாக்கினார்கள்.””

மேலும் ஹஜ் கட்டண குறைப்பு பற்றி அறிக்கை விடும் இந்த ஹஜ் கமிட்டி . இந்த ஹஜ் பயண ஏற்பாட்டிடுகளை மேற்கொள்ள 96 முகவர்கள் என்று அதிகரிக்கப்பட்ட முகவர்களை தெரிவு செய்கின்றனர். அவ்வாறி தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு முகவரிடமும் registration fee ஆக தலா 25,000 ரூபாவை அறவிடுவதன் மூலம் மொத்தம் 24 இலட்சம் ரூபாய்களை ஹஜ் வஙிக் கணக்கில் பெற்றுக் கொள்கின்றனர்.
அது மட்டுமில்லாமல் ஒரு ஹாஜிக்கான அறவீடாக தலா 2000/- கவீதம் மொத்தம் 56 இலட்சம் ரூபாவையும் பெறுகின்றனர். இவை அடங்களாக ஓர் ஆண்டுக்கு மொத்தம் 80 இலட்சம் ரூபாவை திணைக்களம் ஆனது ஹஜ் அறவீடாக பெறுகிறது. திணைக்களம் ஆனது ஒரு தனியான அமைச்சுக்கு கீழ் இயங்கிய போதும அமைச்சு நிதி வதுக்கீடு போக இந்த பெரிய தொகை பணக் கையாடல்களின் உண்மை தன்மை பற்றிய கேளவிகள் பல உருவாகின்றன..

MRCA ஹஜ் account இல் பாவனைக்குட்படுத்தப்படாமல் இருந்த பெருந்தொகையான பணம் திறைசேரி சென்றதாக ஒரு வதந்தி உலவுகிறது..அது உண்மையெனில் இவ்வாறாக அப்பாவி முஸ்லிம்களின் பணம் வீண்டிக்கபட்டதற்கான ஜவாபை அல்லாஹுவிடம் கூற வேண்டியவர்களக பொறுப்பிலுள்ளவர்கள் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை..

மேலும், எமது ஈமானுடைய போராட்டம் என்பது பொருளாதாரத்தை மையப்படுத்தியே உள்ளது. உதாரணமாக தொழுகை நோன்பு என்பவற்றை உள்ளபடியே பின்பற்றும் நாம்,பொருளாதாரம் சார்ந்து அமைந்த ஸகாத், ஹஜ் வணக்கங்களை மேற்கொள்ளும் போது மட்டும் இவ்வளவு பணத்தை செலவு செய்யத்தான் வேண்டுமா?,தனது கையிருப்பு இல்லாமல் ஆகி விடும் அல்லது அப்பணம் கடைசியில் யார் கைககளுக்கு சென்றடகின்றது போன்ற எண்ண ஓட்டங்களை கொண்ட ஷைத்தானுடைய போராட்டம் அதிகமாவது யதார்த்தமே.

“அல்லாஹுடைய பாதையில் செலவிட மக்களை தூண்டும் பொருட்டு நிறைய அல் குர் ஆன் வசனங்களை அல்லாஹ் அருளியுள்ளான்.
“”ஒரு விதை ஏழு கதிர் தரும் அவ்வேழு கதிர்களும் தலா 100 தானியம் வீதம் விளைகின்றது போல் நீங்கள் என் பாதையில் செலவிடும் ஒன்றுக்கு 700 மடங்கௌ வீதம் நான் திருப்பி தருவேன்.

போன்ற வசனங்கள் மூலம் அழகிய கடன்களாகவே ம்க்களை அல்லாஹு த ஆலா வேண்டுகின்றான்.ஆனால், செலவில் மிக குறைந்த திருமணம் தான் அல்லாஹுவால் ஆகுமாக்கப்பட்ட திருமணம் என்பது போன்ற வசனங்களால் ஆடம்பர திருமணங்களை அல்லாஹ் வெறுத்தாலும் ,ஊரை அழைத்து திருமணசெய்யப்படும் ஆடம்பர திருமணங்களில் தமது பணங்களை வாரி இறைக்கும் போது ஒரு போதும் பணச்செலவு பற்றிய கவலை வருவதில்லை ,ஆனால்,அல்லஹு த ஆலா மக்களை நோக்கி வேண்டி நிற்கும் அழகிய கடன்களை நிறைவேற்ற முற்படும் போது ஏற்படும் கஞ்சத்தனம ஆனது மக்களின் ஈமானிய வறுமையயையே காட்டுகின்றது.

இந்த வறுமையயை வெகு இலாபகமாக கையாளும் அதிகார வர்க்கத்தினர்,முகவர்கள் பற்றிய தப்பெண்ணத்தை மறைமுகமாகவோ நேரடியாகவோ மக்கள் மனதில் திணித்து, அவர்கள்தான் மக்களின் சேவகர்கள் என்று தன்னை முன்னிறுத்த பிரயத்தனம் செய்கின்றனர்.
ஹஜ் கட்டண உயர்வுக்கு முகவர்களை நோக்கி குற்ற சாட்டுக்களை அள்ளி வீசும் அந்த ஹஜ் கமிட்டி ஆனது அவர்களின் கடமைகளை சரி வர நிறை வேற்றுகின்றனரா என்பது கேள்விக்குறி. airlines களுடன் பேச்சி வார்த்தை நடத்தி ஹஜ் விமான டிக்கட் கட்டணத்தை குறைப்பதற்கு ஹஜ் கமிட்டி முயற்சிக்க வேண்டும் என்ற ஷரத்தை உயர் நீதி மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சட்ட கோவை குறிப்பிட்டிருக்கின்ற போதும் அது நடைபெறுகிறதா என்பது யாருக்கும் தெரியாது, மேலும் அக் கட்டணம் குறைந்த வரலாறும் இல்லை என்பதே உண்மை.போக்குவரத்திற்கு பணம் இல்லாதவ்ர்களுக்கு ஹஜ் கடமையில்லை என் கருதி அவர்கள் அவ்விடயத்தில் கரிசினை எடுக்காமல் இருப்பின் , ஹஜ் முகவரை நோக்கி மாத்திரம் உங்கள் கட்டணத்தை குறையுங்கள் என்க் கூறுவது எவ்வகை நியாயம்?
300-800 சவூதி றியாலகள வரை sale ஆகும் சவூதி ஹோட்டல்கள், ஹஜ்ஜின் போது திடீரென 3000- 5000 SR வரை அதிகரிப்பதே ஹஜ்ஜின் கட்டண உயர்வில் பிரதான காரணியாக அமைகின்றது.

அதற்கமைவாக சவூதி செலவீனங்களின் தன்மையயை மக்கள் விளங்கி இருந்தாலும் ,சவூதியினரை நோக்கி குற்றம் சுமத்தும் போக்கு நம்மவர்களிடம் காணப்படுவதில்லை ,பச்சை நிறம் என்றால் இஸ்லாம் என்ற பாமர சிந்தனையின் பால் அமைந்த நம்மவர்களின் எண்ணம் சவூதி யயை விமர்சிக்க தடுக்கின்றது.

என்றாலும் நிலவும் வளைகுடா அரசியற் பின்னணியின் காரணமாக ஒரு வேளை இப்போது விமர்சிக்க முற்படக் கூடும்..ஆனாலும் அதற்குரிய justification ஐ பொருளாதார் அரசியற் கொள்கைகள் மூலமே அறிந்து கொள்ள முடியும் என்பதே யதார்த்தமாகும்..ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்த்ன்மையே அன் நாட்டு மக்க்ளின் முன்னேற்றம் என்பதால் கிலாபத் ஆட்சி வந்தாலும் இது போன்ற கட்டண அறவீடுகள் தான் செல வேளை நிகழலாம்.

இது வரை கால இலங்கை ஹஜ் வரலாற்றில் ஹஜ்ஜுக்கான fixed rate இருந்ததில்லை , இருக்கவும் இயலாது என்ற காரணங்களை இக் கட்டுரையின் மூலம் புரிந்து கொள்ள முடியும் .

ஆனால் இலாபத்தை மட்டுமே நோக்காக கொண்ட சந்தர்ப்பத்திற்கு இஸ்லாம் பேசும் முகவர்கள் அதிக கட்டணத்தையே அறவிடுகின்றார்கள். அதுமட்டுமில்லாமல் மற்றைய குறைந்த விலை கட்டணத்தை அறவீடு செய்த முகவர்கள் வழங்கும் அதே சேவையை தான் இவர்களும் வழங்குகிறார்கள் என்பதே கசப்பான உண்மை. இந்த நிலை காலப் போக்கில் அதிகரித்து விட்டது.

இவற்றை திணைக்களம் அறிந்திருந்தாலும் அவர்களுக்கு எதிராக ஒருக்காற்று நடவடிக்கை எடுக்க முற்படும் போது , அம் முகவர்கள் தமது செல்வக்கு பண பலம் போன்ற பின் புலங்களால் நூதன முறையில் தப்பித்துக் கொள்பின்றனர். இது திணைக்களத்தின்தும் ஹஜ் கமிட்டியினதும் பின்புலங்களுக்கு முன் சரணாகதியகும் கையாலாகாத் தனமையையே காட்டுகிறது.

இனி வரும் கால்ங்களிலாவது பாரபட்சமின்றி ஒரு சீரிய முறையில் ஹஜ் பயண் ஏற்பாடுகளை ஒழுங்கு செய்து தமது பொறுப்புகளுக்கும் ஜவாப் செல்லக் கூடிய தக்வாதாரிகளாக இந்த ஹஜ் கமிட்டி செயன்முறையில் மாற்றம் காண வேண்டும் எனவும் இதய சுத்தியோடு இந்த உயரிய ஹஜ் சேவகளை வழங்க முகவர்களும் முன் வர வேண்டும் பிரார்த்திப்போமாக.

இலங்கை ஹஜ்ஜும் நீதி மன்றப் படிகளும் ஒரு பார்வை

ஹஜ் என்ற வணக்கத்தையும் , ஹஜ்ஜுக்கான சேவைகளை வழங்குதல் என்பதையும் பிரித்து நோக்கும் ஒரு பரந்த பார்வையில் இந்த ஆக்கத்திற்குள் நுழைவோம். ஏனென்றால் இஸ்லாத்தில் உணவளித்தல் என்பது இபாதத் ஆக பார்க்கப்படுகிறது.அதற்காக ஹோட்டல் வைத்து சம்பாதிப்பவன் குற்றவாளி என்றும், அவனின் உழைப்பு ஹறாம் என்று கூறுவதும் எவ்வாறு சிறு பிள்ளைத்தனமான வாதமாகுமோ அது போன்று தான் “ஹஜ்” என்ற இபாதத் இன்னும் சொல்லப்போனால் அல்லாஹுவால் விதியாக்கப்பட்ட கடமையை நிறைவேற்ற ஆவன செய்யும் சேவை வழங்குனர்களையும் அவ்வாறானதோர் குறுகிய விமர்சன சட்டகத்திற்குள் அடக்குவது அறியாமையின் விளைவாக அமையும்.

ஹஜ் பற்றியதும் இஸ்லாம் பற்றியதுமான போதிய விழிப்புணர்வு ஒப்பீட்டளவில் மிகக் குறைந்து காணப்பட்ட 60,70 காலப் பகுதிகளில் ஹஜ்ஜுக்கு செல்லும் உலக மக்கள் தொகயில் பெரும் வீழ்ச்சியே ஒப்பீட்டளவில் காணப்பட்டது. இலங்கையில் ஹஜ்ஜுக்காக மக்களை அழைத்து செல்லும் இந்த ஹஜ் முகவர் சேவையயை மேற்கொள்ள போதிய முனைப்பும் அறிவும் இல்லாமையினால் ,அச்சேவையயை முன்னின்று மேற்கொள்ள யாரும் விரும்பியதுமில்லை வரவுமில்லை. அரேபிய தீபகற்பங்களுக்கு படிக்க சென்றவர்கள்குறிப்பாக மக்கா,மதீனா நகரங்களில் இஸ்லாமிய அறிவை தேடி கற்க சென்றவர்கள்,மற்றும் உள்ளூர் கல்விமான்கள்,படித்த அரசியல் பிரமுகர்கள் போன்றோரின் முனைப்பினால் ஹஜ் யாத்திரை பற்றிய விழிப்புணர்வு ஓரளவு இலங்கை மக்களுக்கு ஊட்டப்பட்டது.அந்த வகையில் ஹஜ் முகவர் சேவையும் தானாகவே அறிமுகம் பெற்று பல சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டது.

அந்த கால கட்டத்தில், சவூதி என்பது, அதிக யாத்திரிகர் தொகையயை accommodate பண்ணக் கூடிய இட வசதி மிக்க ஓர் வளரும் நாடாகவே அமைந்திருந்தது, அதற்கமைய பிற நாடுகளிலிருந்து வரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையில் எதுவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாமல் ஓர் எளிய முறையில் ஹஜ் என்ற வணக்கம் நடபெற்றுக் கொண்டிருந்தது.

அந்தக் காலங்களில் இலங்கைக்கென ஒரு சவூதி embessy யும் இல்லாத காலகட்டம் ஆகையால்,இந்தியாவிலிருக்கும் சவூதி embessy மூலமாகவே ஹஜ்ஜுக்கான visa க்களை பெற்றுக் கொண்டனர். நாடு பூராகவும் ஹஜ் செல்ல விரும்பிய மக்கள் , ஹஜ் முகவர்கள் என சுய பிரகடணம் செய்தவர்களிடம் தமது ஆவணங்களை ஒப்படைப்பார்கள். பின்னர்,முகவர்களால் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களை visa பதிவு செய்யவென இந்திய சவூதி embessy அதிகாரிகள், இலங்கை அரசால் வரவழைக்கப்பட்டு அனுமதிகள் வழங்கப்பட்டன.

அந்த காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகித்து கொண்ட முஸ்லிம் அமைச்சர்,mpக்களின் முஸ்லிம் சமூகம் பற்றிய சிந்தனையே பண்டைய ஹஜ் யாத்திரிகைக்கு பெரும் பங்காற்றியது என்பதற்கான வரலாற்று சான்றுகள் பல உள்ளன, ஒரு முறை இந்திய சவூதி embeesyயின் வீசா பதிவிற்கு தாமதித்த 30,40 யாத்திரிகர்களை வீசா இல்லாமல் MH மொஹமட் அவர்கள் அம்க்களை தம்முடன் அழைத்து நேரடியாக மக்கா சென்று இறங்கி அங்கேயே வீசாவப் பெற்று ஹஜ் செய்து திரும்பிய வரலாற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அதன் பின்னரான 80 களின் காலப் பகுதியில் குறிப்பாக 87 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கான சவூதி embessy ஒன்று நிறுவப்படுவதற்கு முன்னர்,அரச அனுமதியுடன் முகவர்கள் இந்தியா சென்று ஹஜ் வீசக்களை பதிவு செய்து ஹஜ் முகவர் சேவையயை முன்னின்று மேற்கொண்டனர்.
அதன் பின்னரான காலப் பகுதியில் உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் முஸ்லிம்கள் ஹஜ் வணக்கத்தின் தார்ப்பரியத்தை படிப்படியாக விழிப்புணர்வு அடையத் துவங்கி யாத்திரிகர்கள் எண்ணிக்கையில் பெருக்கமும் அதிகரித்தது.

அதன் விளைவாக உலக மக்கள் அனைவருக்கும் ஹஜ் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள சவூதி அரசாங்கமானது அவர்கள் நாட்டு இறைமை மற்றும் குடிவரவு மேலாண்மை சக்திக்கு உட்பட்டு பிற நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்களின் விகிதாசாரங்களுக்கேற்ப குறித்த தொகை கோட்டாக்களை உரிய நாடுகளுக்கு வருடா வருடம் பகிர்ந்தளித்து அம் மக்களை தம் நாட்டுக்குள் accommodate செய்யும் வழமையயை பின்பற்றத் தொடங்கியது..

அந்த வகையில் இலங்கைக்கு கிடைக்கப் பெறும் கோட்டா
2800 ஆக அமைகிறது. இருந்த போதும் மேற்கத்திய காலணித்துவத்திலிருந்து மீண்ட இலங்கை நாட்டு முஸ்லிம்களின் இஸ்லாமிய அறிவு குறிப்பிட்ட மார்க்கம் படித்த மக்கள் கூட்டத்திற்குள்ளேயே சுருங்கிய நிலை காணாப்பட்டது.மார்க்கப் பிரச்சாரங்கள் போதுமான அளவில் இல்லாத அன்றைய இலஙகை முஸ்லிம்களிடம் ஹஜ் பற்றிய போதிய ஆசையூட்டல்கள் இல்லாத காரணத்தால் சொற்ப எண்ணிக்கையான மக்களே ஹஜ் யாத்திரிகை மேர்கொண்டனர். அதற்கேற்றாற் போல் முகவர்களுக்கான ஹாஜிகள் ஒதுக்கீட்டையும் இலங்கை அரசாங்கம் வரையறின்றி கையாண்டது.சொல்லப் போனால் இந்த முகவர்களின் ஹஜ் பற்றிய ஆசையூட்டல்களே அன்றைய மக்கள் ஹஜ்ஜுக்கு செல்ல பெரும் காரணியாக அமைந்தன.

2000 ஆம் ஆண்டுக்கு பின்னரான உலகமயமாக்களின் எழுச்சியில் மக்களின் அறிவு மட்டம் பொருளீட்டல் என்பவற்றில் பாரியதொரு வளர்ச்சி ஏற்படத் துவங்கியது.
அதன் விளைவு சகலதும் பற்றியதான அறிவை ஆசான் இன்றி கற்கத் தொடங்கிய மக்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் , இஸ்லாத்தை கற்பதில் ஏற்பட்ட வளர்ச்சியை இப்போது கண்கூடே பார்க்க முடிகின்றது.
அதனோடு அமைந்த தனிமனித பொருளாதார வளர்ச்சியினால் ஹஜ் என்ற வணக்கத்திற்கான தெளிவு மற்றும் அதன்பாலான ஆசையூட்டல்கள் அதிகரித்து ஹஜ்ஜுக்கு செல்லும் மக்கள் தொகையின அதிகரிப்பு நாடுகள் தோறும் ஏற்பட் துவங்கியது..

ஆனால் பாதுகாப்பு , இறைமை மற்றும் மேலாண்மை சக்தி என்பவற்றிற்கு உட்பட்டு பெருந்தொகையான மக்களை accommodate செய்ய சக்தியற்ற சவூதி அரசாங்கம் ஏற்கனவே சனத்தொகை விகிதாசார அடிப்படையில் அமையப் பெற்ற கோட்டா முறைமையை ஒவ்வொரு நாட்டின் மீதும் படிப்படியாக கண்டிப்பாக கையாளத் துவங்கியது.அந்த வகையில் 2006 ஆம் ஆண்டானது இலங்கையிலும் வரையறுக்கப்பட்ட கோட்டா முறைமை எந்த வித முன்னறிவிப்புமின்றி விதிக்கப்பட்டு 5000 ஆக இருந்த கோட்டா எதிர்பாராத விதமாக 2800 என மாற்றம் பெறத் தொடங்கியது.

இலங்கை ஹஜ் கோட்டா ஒதுக்கீட்டை பெற்ற ஹஜ் முகவர்கள் சவூதி சென்று அங்குள்ள இலங்கை embessy யில் தம்மை பதிவி செய்த பிற்பாடு ஹஜ்ஜுக்கான முன் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.அதற்கமைய2006ஆம் ஆண்டு சவூதியில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள சென்ற சில முகவர்களில் முந்திக் கொண்ட முகவர்களை தவிர மற்றைய 30,40 முகவர்களுக்கான ஹஜ் அனுமதிப்பத்திர பதிவு திடீரென்று நிறுத்தப்பட்டது.முந்திக் கொண்டு சவூதி சென்றோர் அதிலிருந்து தப்பிக் கொண்டனர்.
இதனால் எஞ்சிய 40 வீதமான முகவர்களிடம் இணைந்து கொண்ட ஹஜ் யாத்திரிகர்களின் ஹஜ் கனவு உடைந்து போன துக்ககரமான சம்பவம் நடந்தேறியது.
தாமதமான முகவர்கள் பாரியதொரு பொருளாதார நெருக்கடிக்குள் மாட்டிக் கொண்டாரகள் என்பது பலராலும் அறியப்படாத விடயமாகும்.

ஹஜ்ஜுக்கான சகல வசதிகளை மேற்கொண்டு விட்டு இறுதியில் கோட்டா வழங்கப்படாதல் கை சேதப்பட்ட முகவர்களுக்கு தீர்வு வழங்கும் முகமாக அன்றைய ஹஜ் அமைச்சரால் ஒரு முன்னெடுப்பும எடுக்கப்பட்டது. அதற்கமைய 300,200, என கோட்டாக்களை தன் வசப்படுத்திக் கொண்ட ஏனய முகவர்கள் தமது ஒதுக்கீட்டில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளித்து உதவுங்கள் என்ற வேண்டுகோள் ஒன்றை அமைச்சர் விடுத்தார். ஆனாலும் அவ் வேண்டுகோள் சகோதர முகவர்களால் புறக்கணிக்கப்பட்டது. திணைக்களமும் செய்வதறியாது கைவிட்ட நிலையில் நீதி மன்றம் சென்று இழப்பீடு கோரி நிற்க வேண்டிய நிர்க்கதி நிலை பாதிக்கப்பட்ட முகவர்களுக்கு உருவானது . அதற்குரிய பொருத்தமான இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படாமல் பாரியதொரு இன்னல்களுக்கு முகவர்கள் உள்ளானது எழுதப்படாத வரலாறு ஆகும் ..இதுவே இலங்கை ஹஜ் முகவர்கள் நீதிமன்றம் நாடிய முதல் சந்தர்ப்பமாகவும் அமைந்தது.

அதன் பின் 2012 ஆம் ஆண்டு வரையில் ஹஜ்ஜுக்குரிய அமைச்சர்களே தங்களது தன்னிச்சையின் பால் பல வேளைகளில் சரியாகவும் சில இக்கட்டான சூழ் நிலைகளில் பிழையாகவும் ஹஜ் கோட்டா பங்கீடு மற்றும் முகவர்கள் தெரிவு என்பவற்றை மேற்கொண்டனர். இதன் விளைவாக இந்தப் பங்கீடுகள் மற்றும் முகவர் தெரிவுகளில் பல அரசியல் குளறுபடிகள் நடந்தேறுகின்றன எனக் கண்ட ஒரு சில முகவர்கள் உயர் நீதிமன்றம் சென்று ஹஜ் முகவர் தெரிவின் அடிப்படை வதிகள்,மற்றும் கோட்டா பங்கீடு என்பவற்றை கேள்விக்குட்படுத்தினார்கள்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக அவசரவசரமாக அன்றைய ஹஜ் பொறுப்பான அமைச்சரினால் ஒரு தகுதிகாண் முறைமை பட்டியல் அடங்கிய சட்ட கோவை முன்மாதிரி (hajj guidelines) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நீதி மன்றமும் அதை அங்கீகரித்து அதையே இனி வரும் காலங்களில் பின்பற்ற வேண்டும் என்ற பணிப்புரையையும் முஸ்லிம் திணைக்களத்திற்கு விடுத்தது..

ஆனால் அந்த அங்கீகாரம் பெற்ற hajj guidelines இல மறைமுகமாக அதிகார கையாடல்கள் இடம் பெற சாத்தியமான வழிவகைகள் அமைந்திருந்தமையினை முகவர்களும் ஹஜ் கமிட்டியினர் மற்றும் அதிகாரத்திலிருக்குப்பவர்களும் பயன்படுத்த முயற்சித்தனர். இதன் விளைவாக தாம் பாதிக்கப்படுவதாக உணர்ந்த சில முகவர்கள் 2012 க்குப் பின்னரான ஒவ்வொரு வருடமும் பல நியாயமான காரணங்களுக்காக நீதிமன்றம் நாடி தீர்வை வேண்டுவது வாடிக்கையாகி விட்டது.

உயர் நீதி மன்ற hajj guidelines பற்றிய தெளிவு இல்லாமையினாலும் அதன் பாரதூரத்தை விளங்க மறுப்பவர்கள் அதிகாரத்தில் இருப்பதாலும் இந்த இலங்கை ஹஜ் நிருவாகத்தை தாந்தோன்றித்த்னமாக இந்த திணைக்களம் செயற்படுத்துகிறது.

மேலும் hajj guidelines மற்றும் மாஸிதுஸ் ஷரீஆஎன்பவற்றின் க்குஅமைவாக ஆரோக்கியமான ஹஜ் முகவர் தெரிவு நீதி நியாயமான பங்கீடு என்பவற்றை நிலைநாட்ட ஹஜ் கமிட்டிக்கு ஆலோசனை அளிக்க சில முகவர்கள் முயற்சித்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் “court இல் வழக்குப் போடுங்கள் “என்ற மமதையான பதில்களையே இத்தனை காலமும் எடுத்தெறிந்தாற் போல் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.

hajj guidelines இல் ஓட்டை உடைசல்களை நிவர்த்தி செய்யாது அதிகாரத் தொனியில் நிருவாகத்தை மேற்கொள்ளும் அதிகார வர்க்க குழுமத்தில் மார்க்கம் மற்றும் நிருவாகம் துறையில் தேர்ச்சி பெற்ற இது வரை கால திணைக்களப் பணிப்பாளர்களும் உள்ளடங்குகின்றனர் என்பது மிக கவலையே..
அதற்கமைய அவ வங்கீகரிக்கப்பட்ட ஹஜ் தெரிவு முறைமையில் திருத்தங்களை மேற்கொள்ளாமல் அதற்குப் புறம்பாக புதிய மாற்றீடு முறைமையை 2016 ஹஜ் முகவர் தெரிவு ,கோட்டா பங்கீட்டுன் போது பின்பற்ற விளைந்தமையே இவ்வருட ஹஜ் தெரிவும் நீதி மன்றம் சென்றமைக்கான காரணமாக அமைகிறது.அங்கீகரிக்கப்பட்ட முறைமையை சீர்திருத்தி செயற்படுத்துமிடத்தினால் பெரிய முகவர்கள் என்ற செல்வாக்குப் பெற்றவர்கள் தமது கோட்டாவில் வீழ்ச்சியை சந்திப்பர். உதாரணமாக 2015 ஆம் வருடம் நீதிமன்றம் வரலாறு இதற்கு சான்று பகரும்.

இலங்கை hajj guidelines இல் ஒரு முகவருக்கு ஆகக் குறைந்தது 45 கோட்டா பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்று இருப்பினும் சவூதி அரசின் 2014 ஆம் ஆண்டின் முகவர் மேம்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக குறைந்தது 50 கோட்டா கொண்ட முகவர் ஒருவரே சவூதி ஹஜ் அமைச்சினால் தமது ஹஜ் ஏற்பாட்டைமேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
மேலும் இலங்கைக்கான 2800 கோட்டா வுக்கும் 96 முகவர்கள் காணப்படுவதால் ஆக குறந்த்தது 50 கோட்டா என்ற minimum தொகை எல்லா முகவருக்கும் பகிர்ந்தளித்த பின்னரே 50 இற்கும் அதிகமான கோட்டாக்கள் முகவர்களின் experiences க்கு ஏற்ப வழங்கப்பட முடியும் .
இவ்வாறாக hajj guidelines இருக்கும் போது தன்க்கு கிடைத்த 55 கோட்டா போதாது ஏனென்றால் தனது அனுபவத்திலும் குறைந்த இன்னுமொரு முகவருக்கும் அதே 55 கோட்டா வழங்கியது முறையற்றது என கஒரு பெருத்த முதலாளி முகவர் ஒருவர் நீதி மன்றில் வழக்கு தொடர்ந்தார்..
ஆனால் குறைந்தது 50 கோட்டா பங்கீடு என்றிருக்க உங்களுக்கு 55 என்பதே அதிகம் என்று 5 கோட்டாவை மீளப் பெற்றுக் கொண்டது நீதி மன்றம். இதனால் வழக்குத் தொடர்ந்தவர் கைசேதப்பட்டார் என்பதையும் தாண்டி ஏனைய பல ஆண்டுகாலம் ஒப்பீட்டளவில் அனுபவமிக்க முகவர்களுக்கு அநீதியாக வழங்கப்பட்ட 25,20 கோட்டாக்கள் 30,35 என அதிகரித்து கொடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படது என்பது மறுக்க முடியாத உண்மை..

இவ்வாறு கை சேதப்பட்ட அதிகாரம் மற்றும் இலங்கை ஹஜ் யாத்திரிகையின் ஏக போக உரிமையயை கொண்டாட நினைக்கும் முகவர்கள் சிலர், இந்த 2800 கோட்டவில் பெரும்பான்மையான வியாபாரத்தை தம் வசப்படுத்த அவர்கள் சிந்தனையில் உருவான ஒரு யோசனையயை இலங்கை ஹஜ் கமிட்டி உள்வாங்கி ஒரு புதிய முறைமையயை செயற்படுத்த ஆரம்பித்தது..இதன் மூலம் பல முகவர்களுக்கு அ நீதி இழக்கப்படுவதை அறிந்திருந்தாலும் பல உட்காரணங்களை தன்ன்கத்தே கொண்டு இந்த ஹஜ் கமிட்டி இம்முறைமையயை செயற்படுத்துகின்றது.

இந்த வரலாற்றை உற்று நோக்கும் போது, இவர்கள் நீதி மன்றத்தை அவமதிக்கின்றார்கள் என்பதனையும் தாண்டி ஹஜ் முகவர்களுக்குள் இருக்கும் போட்டித்தன்மையும் உளத் தூய்மையற்ற போக்கையும் பயன்படுத்தி இவர்களுக்குள்ளான பிளவை ஏற்படுத்துகிறார்கள், அத்தோடு தமக்கு வாசியான மிடுக்கான செலவங் கொப்பளிக்கின்ற முகவர்கள் சார்ந்து முடிவுகளை எட்டுகிறார்கள் என்ற பார்வையே இதனால் மேலோங்குடுவதை தவிக்க முடியாது.…
இதனை நியாயமாக எதிர்த்தாலும் கேள்வி கேட்கும் முகவர்கள் பற்றிய தவறான அபிப்பிராயங்களை பாமர மக்கள் முன் விதைத்து ஒட்டு மொத்த ஹஜ் முகவர்களையும் கொள்ளையடிக்கும் சமூகமாக காட்சிப்படுத்த முனைகின்றனர்..

ஹஜ் முகவர் தொழில் என்பது மார்க்க அடிப்படையில் ஆகுமாக்கப்பட்டது என்றாலும் அவர்களில் பெரும்பான்மையானோர் கெள்ளை லாபம் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்பதும் மற்ப்பதற்கில்லை . எல்லா முகவர்களும் ஒரே சேவையை ஹாஜிகளுக்கு கொடுப்பதுமல்லை..மற்றைய முகவர்களது சேவை அதற்கான கட்டணம் என்பவற்றை ஒப்பீடு செய்யும் போது தான் ஏனைய முகவர்களது பேராசை புலப்படும்..

மேலும், கடந்த ஒரு தசாப்தமாக குறிப்பாக கடந்த 5 வருடங்களாக தொடதேர்ச்சியாக நீதி மன்றம் செல்லும் இந்த ஹஜ் விடயத்தை சற்று ஆராய்ந்து பார்க்கும் போது , மனுதாரர்களான முகவர்களே பெரும்பாலும் வெற்றி ஈட்டுயுள்ளனர்.. ஆகவே இதில் புலப்படுவது யாதெனில், ஹஜ் அமைச்சினதும் , ஹஜ் கமிட்டியினதும் பக்கச்சார்பானதும்,மற்றும் தமது அபிமானிகளுக்கு முகவர் அந்தஸ்த்தை முறைகேடாக பெற்றுக் கொடுத்தல் போன்ற அரசியற் போக்குமே காரணங்களாக அமைகின்றன.

இங்கு அமைச்சரினதும் ஹஜ் கமிட்டியினதும் சேவையாக கட்டணக் குறைப்பு பற்றிய முன்னெடுப்பளை பாராட்டும் நாம் , அதனால் ஹஜ் செய்யப் போகும் யாத்திரிகர்கள் எதிர் நோக்கப் போகும் சேவை ரீதியான குறைகளை கண்டு கொளவதில்லை..
LESS PRICE + standard PROFIT= LESS QUALITY என்பது சாதரண நடைமுறாஇ வியாபார உத்தி.
எல்லா முகவர்கள் நிலையங்களும் இந்த வியாபாரத்தை குறிப்பிட்ட இலாபத்தை நிறுவிக் கொண்டே தமது கட்டணத்தை அறவிடுகின்றன.
இங்கு விலை குறைக்கப்படும் போது சேவையின் தரம் குறையும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.. இந்த சேவை குறைப்பு பற்றி , ஹஜ் முடிந்த பிற்பாடு , ஹாஜிகளால் திணைக்களத்தில் முறையிடப்ட்டாலும் பலனளிக்கப் போவதுமில்லை.. ஏன் ,, 2015 ஆம் வருடம் பிரசித்தி பெற்ற முகவர்கள் அடங்கலாக 10 பேரின் மேல் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யாது?? அவர்களுக்கும் 2016 மற்றும் இவ்வாண்டும் maximum 100 என்ற கோட்டா கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

நீதி மன்ற guideline ஐ பின் பற்றி கோட்டா பகிரந்தளித்தல் முறை கையாளப்பட்டிருந்தால், தண்டிக்கப்பட வேண்டிய முகவர்களுக்கு ஆக்க் குறைந்தது “கோட்டா குறப்பு ” என்ற தண்டனையை சரி வழங்கியிருக்க முடியும் ,,

ஆனால் , ஹஜ் கமுட்டியினால் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டதாக சொல்லப்படும் FREE MARKET FORCE “கட்டற்ற பொருளாதார சந்தை “.. என்ற கோட்பாட்டின் விளைவால் பலம் படைத்தவர்கள் தப்பித்துக் கொள்ள வழி வகை செய்து கொடுக்கப் படுகிறது…
அதாவது hajj guideline இல் அறிவுறுத்தப்படுவது போல் minimum கோட்டா அளவு என்ற ஒன்று இல்லாமல், maximum கோட்டா அளவில் பங்கிடும் முறைமை தானாம் இதன் அர்த்தம் என்ற வியாகியானத்தையும் வழங்குகின்றானர்.

மெத்தப் படித்தவர்களின் இவ்வாறான இப் பொருளியல் தத்துவ முறைமையினால் விளம்பர உத்தியை கையாளத் தெரிந்தவர்களின் பணம் கொழுத்த முதலாளிகளின் fame என்ற ஆதிக்கத்தால் யதார்த்தம் அறியாத யாத்திரிகர்கள்
கவரப்படுகிறார்கள் என்பதே உண்மை…
பலம் படைத்தவன் வெற்றியாளன்; கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவன் என்ற முற்றுமுழுதான முதலாளித்துவ பொருளியல் கோட்பாட்டையே இது பிரதி பலிக்கிறது..
மேலும் சமூக தொண்டு என்ற பெயரில் foundation களை நிறுவி தமது சேவைகளை வெளிக்கொணரும் இன்னும் சில பணமீட்டும் உத்தியை பிரதானமாக்க் கொண்ட ஒரு சில முகவர்கள் தமது கடந்த கால இந்த ஹஜ் சேவையில் நிகழ்த்திய ஏமாற்று வித்தைகளை மறைத்து வெளிக்கள சேவைகளை தலைப்புச்செய்தியாக மாற்றி அதன் மூலம் மக்களை கவரும் உத்தியிலும் ஈடுபடுவதை கண்கூடே பார்க்க முடியும்.

ஹஜ் கமிட்டி கூறும் இந்த market force நடை முறை உண்மையில் அதன் கோட்பாட்டு ரீதியில் இந்த முகவர் வியாபாரத்தில் பொருந்துகிறதா என்றால் அதுவுமில்லை..
ஏனெனில், இக்கோட்பாட்டை நடைமுறைச் சாத்தியமாக்கும் பிரதான பகுதியாக திகழ்வது,,
Supply and demand “குறை , நிரப்பல்”
இதில் supply என்பது சவூதி அரசினால் வழங்கப்படும் கோட்டா எனக் கொண்டால் …
Demand என்பது , ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்திருக்கும் யாத்திரிகர்கள் ஆவர்…
இந்த supply and demand இல் எது வித தலையீடுகளும் வரையறைகளும் விதிக்கப்படமல் நுகர்வோருக்கும் வியாபாரிக்குமான நேரடி ஒப்பந்தத்தின் மூலம் மட்டுமே இந்தக் கோட்பாடு சாத்தியம் பெறும்..

ஆனால் இங்கே supply எனும் கோட்டா ஆனது எக்காலமும் இலங்கைக்கு உரித்தான 28000 என்றே வரையறுக்கப்பட்டுள்ளது..
Demand என்ற யாத்திரிகர்களின் எண்ணிக்கை என்பது அதிகளவில் உள்ளது.. இதை முஸ்லிம் திணைக்களம் ஹஜ் பதிவு முறை என்ற தலையீட்டை மேற்கொண்டு அவர்களுக்கு பதிவு இலக்கம் கொடுத்து வரையறுத்து அவர்களின் list ஐ இரகசியமாகப் பேணுகின்றது..
ஆக,, இந்த வரையறையும் கட்டிப்பாடுகளும் நிகழும் இடத்தில் மேற்கூறப்பட்ட market force என்ற சித்தாந்தம் சாத்தியமா??
இந்த முறைமையை வேண்டுமென்றே சித்தாந்தப் பெயர் கொண்டு திணிப்பதன் மூலம் முகவர்களின் வாயை அடைக்கப் பாரக்கிறார்கள்,

மக்கள் முகவர்களிடம் depend ஆக இல்லாமல்,முகவர்கள் மக்களிடம் depend ஆகுவதால் முகவர்கள் மக்க்ளின் காலடிக்கு வருவார்கள். அதன் மூலம் மக்கள் வேண்டியவாறு ஹஜ் கட்டணத்தை bargain செய்து கொள்ள முடியும் என்ற ஒற்றைப் பார்வையில் யாத்திரிகர்களின் மீது அக்கறை மிக்கவர்களாக தமது அரசியற் செயற்பாட்டை நிலை நிறுத்த முயசிக்கின்றனர்.

இதன் மூலம் முகவர்களுக்கிடையில் போட்டித் தன்மையயை உருவாக்கி ஒரு முகவர் செய்த வியாபாரத்திற்கு மேலால் மற்ற முகவர் வியாபாரம் செய்ய தூண்டும் ஹறாமான செயற்பாட்டுக்கான அடித்தளத்தை இதன் மூலம் உருவாக்குகின்றனர் என்பதை கண்கூடே காண முடிகிறது..

6 பேர் உண்ணக்கூடிய சவன் ஒன்றே ஒன்று உள்ளது. அதை சுமார் 15 பேருக்கு கட்டாயம் பகிர்ந்தளிக்க வேண்டும் . ஆனால் அந்த சவன் உங்கள் ஒவ்வொருவருக்கும் தான் என கூறினால் அதை பங்கிடும் முறையெனெ கூறலாமா?இல்லை அது ஆகுமான பங்க்கீடு தான் என்றால் அந்த 15 பேரும் ஒரு சகனில் உட்கார்ந்து எவ்வாறு உண்ணுவார்கள் என்பதை கற்பனை செய்து பார்த்தால் முகவர்கள் தம்க்கிடையே எவ்வாறு அடித்துக் கொள்வர் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இஸ்லாமிய உலக வரலாற்றில் அதி சிறந்த நிருவாக தலைவர் என்ப் புகழப்படும் உமர் (றழி) அவர்கள் மகாஸிதுஸ் ஷரீ ஆ அடிப்படையில் எவ்வாறு முடிவுகளை எடுத்தார் என்பதை கீழ் வரும் சம்பவத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
இராக்கிலும் எகிப்திலும் புதிதாக காஇப்பற்றப்பட்ட நிலங்களை தனக்கு கனீமத் ஆக வழங்கும் படி உமர் (றழி) அவர்களிடம் ஸஹாபாக்கள் கேட்டனர். போராடியவர்களுக்கே கனீமத் சொந்தமாகும் என்ற தெளிவான அல் குர் ஆன் வசனத்தை அவர்கள் இதற்கு ஆதாரமாக காட்டினர்.

ஆனல் உமர்(றழி) அவர்கள் இன்னுமொரு அல் குர் ஆன் வசனத்தின் ஆதாரத்துடன் அதனை மறுத்துரைத்தார். செல்வம் சிலரது கைகளில் மட்டும் குவிந்திருக்க கூடாது என்ற வசனத்துக்கு ஒரு நோக்கம் இருக்கின்றது என்று வாதாடினார். பொருளாதார நீதியயை நிலை நாட்டும் ஒழுங்காகவே இந்த கனீமத்தை அவர்கள் கருதினார்கள்.
(மகாஸிது ஷரீ ஆ)

மேற்கூறப்பட்ட சம்பவத்துடன் ஹஜ் கமிட்டியின் புதிய ஹஜ் கோட்டா ப்ங்கீட்டு முறைமையயை ஒப்பிட்டு பார்த்தால் ,தெரிவாகியிருக்கும் 96 முகவர்களில் ஒரு குறிப்பிட்ட தொகயினரே இந்த 2800 ஒயாத்திரிகர்களையும் பெற்றுக் கொள்வர்.
கடந்த காலங்களில் அனுபவமிக்க முகவர்க அடங்கலான சுமார் 20 பேர் கோட்டா இன்றி பாதிக்கப்பட்டது இதற்கு சான்றாகும் .மேலும் இம்முறையும் அரை வாசிக்கும் மேற்பட்ட முகவர்கள(12 முகவர்களுக்கு -0கோட்டாவும்,,,18 முகவர்களுக்கு — 10 கோட்டாவுக்கும் குறைவாகவும,,20 முகவர்களுக்கு-20 க்கும் குறைவான கோட்டவும் ,,, ஆக கிடைக்க பெற்று பாதிப்படைந்துள்ளர்கள் என்பது முகவர்களூக்கான பொருளாதார் நீதி ஹஜ் கமிட்டியால் மறுக்கப்படுவதை தெட்ட தெளிவாக காட்டிகின்றது. ஏனைய 46 முகவர்கள் மட்டுமே இந்த முறைமையினால் பயன்பாட்டை பெற்று கொள்கின்றனர், இது சென்ற வருடத்தையும் பார்க்க டமூன்று மடங்குபாதிப்பாகும்,வரும் வருடங்களிலும் இம் முறை அமுல் படுத்தப்பட்டால் இதை விட மோசமான பாரபட்சம் நிகழும் என்பது நடை முறையில் கண் கூடே காண முடிகின்றது

மஸ்லஹா என்ப்படும் மனித நலன் இஸ்லாமிய சட்டவாக்கத்தின் மூல நூலான அல் குர் ஆனிலிருந்து இஸ்லாமிய சட்டவாக்கத்துக்கு பெறப்படுகின்ற ஒரு அடிப்படை. நலனுக்கு இட்டு செல்லுதல் என இதற்கு சுருக்கமாக விளக்கம் தரலாம். அதன் படி சட்டத்தினுடைய தேவை மஸ்லஹாவை அடிப்படையாக கொண்டு வராவிட்டால் அல்லது தீங்கொன்றை களைவதாக இல்லாவிட்டால் அது தவறானது.
மனித நலனுடன் முரண்படும் எதுவுமே சட்டமல்ல.(மகாஸிது ஷரீ ஆ)

ஹஜ் கமிட்டியில் அங்கம் வகிக்கும் இஸ்லாத்தை படித்து விட்டு மெளனமாக இருக்கின்ற மிதவாத(moderate) இஸ்லாமிய சிந்தனையாளர்களும் இதற்கு ஜவாப் சொல்ல வேண்டும்.தமது அலட்சியத்தாலும் பிடிவாதத்தாலும் அதிகாரத்திலிருப்பவர்கள் எவ்வாறு இஸ்லாத்தை கொச்சைப் படுத்துகிறார்கள் என்பதை இந்த இஸ்லாமிய வாதிகள் பார்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கின்றார்கள்.அறியாதவர்களுக்கு அவர்களது அறியாமைக்கு நியாயங்கள் இருக்கலாம், ஆனால் விவேகமுள்ளவர்கள் அமைதியாக இருப்பதற்கு நியாயங்கள் சொல்ல முடியாது.

பொருளியல் சித்தாந்தம் , தார்மீக நெறிமுறை, மற்றும் இஸ்லாமிய வழிகள் இவை எவற்றிலும் பொருத்திப் பார்க்க முடியாத இந்த புதிய ஹஜ் முறைமையயை அவர்கள் நியாயப் படுத்தும் ஒற்றைப் பார்வை “ஹஜ் கட்டணத்தை குறைத்தல்” என்பதாகும்.

ஆகவே இங்கு ஹஜ் என்பது அல் குர் ஆன் அடிப்படையில் ஒரு மனிதனுக்கு எப்படி விதியாகும் என்பதை அறிந்து கொண்டால் ஹஜ் கமிட்டியின் அந்த ஒற்றைப் பார்வயின் உள் நோக்கும் புலப்படும். ஹஜ் என்பது பொருளாதாரம் ,உடல் ஆரோக்கியம் மிக்கோருக்கான கடமை. இதில் பொருளாதார வசதி படைத்தோர் என வகைப்படுத்தப்படுபவர்கள் யார்? என்பது மிக முக்கியம்.

உதாரணமாக மாதாந்த சம்பளத்திற்கு ஸகாத் கடமையாகும் ஒருவர் தனது வருமானத்தில் அடிப்படை மாத செலவுகள் போக எஞ்சிய பணத்திற்கு ஸகாத் கணிக்க வேண்டும்.ஆகவே இங்கு மாதாந்த செலவு என்பது அவரின் வாழ்க்கைத் தரம், குடும்ப நிலை எனபவற்றின் அடிப்படையில் அமைந்த அவரது சூழலில் பொதுப்படையாக நிலவும் ஒரு குறிப்பிட்ட தொகை . அதை இன்னுமொருவர் நிர்ணயம் செய்ய முடியாது.

சமூகத்தில் நிலவும் பொதுத்தன்மை மற்றும் தமக்கு விதியாகப் போகின்ற விடயத்தின் இடம், நாம் வாழும் சூழல், தமது வாழ்க்கை தரம், தேவை, மற்றும் தனது குடும்ப நிலமை என்பவற்றை கொண்டே நாம் ஒரு விடயத்தின் மீது கடமையாகின்றோமா? என்பதை நிர்ணயிக்க வேண்டும். அவ்வாறே ஹஜ்ஜும் கடமையாகும்.

அதாவது ,ஹஜ் என்பது சவூதி என்ற செல்வந்த நாடு சென்று,அந்நாட்டு தரங்களுடன் அமைந்த ஹோட்டல்களில் தமது வாழ்க்கை தரத்தோடு ஓரளவு ஒத்துப் பொகும் ஹோட்டல்களை தேர்வு செய்து அவற்றின் கட்டணங்களைப் பொருந்தி , மேலும் ஹஜ்ஜுக்காக சவூதி ,இலங்கை அரசாங்கங்ள் அறவிடும் ஏனைய உட்கட்டமைப்பு கட்டணங்களையும் செலுத்துமளவுக்கு யாருக்கு பொருளாதார வசதி உள்ளதோ அவருக்கு ஹஜ் கடமை ஆகும்.மேலும் ஹஜ்ஜுக்கான செலவீனங்கள் பற்றிய தெளிவைப் பெற கீழ் காணும் link ஐ click செய்யுங்கள்.
http://www.madawalanews.com/2017/06/hj.html?m=1

ஹஜ் பயண ஏற்பாடுகளும் ஹஜ் கட்டணமும்; ஓர் ஆய்வு

மதாந்த செலவுகள் போக எஞ்சியவற்றுக்கு ஸகாத் கொடுக்க வசதி இல்லையெனில் எவ்வாறு தமக்கு ஸகாத் கடமையில்லையோஅவ்வாறு மேற்கூறப்பட்ட பொருளாதார வசதி அற்ற ஒருவருக்கு ஹஜ் விதியாவதில்லை.
வாழ்நாளில் ஒரு முறையாவது ஸகாத் கொடுக்க முயற்சிக்க தமது உழைப்பு வருமானத்தை கூட்டிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.அது போல ஹஜ் ஜுக்காகவும் தம்மை தயார் படுத்திக் கொள்ள தமது பொருளாதாரத் தகமையை பெருக்கிக் கொள்ள வேண்டும். அப்போதே ஹஜ் என்பது கடமையாக மாறும்.

மேலும், எமது ஈமானுடைய போராட்டம் என்பது பொருளாதாரத்தை மையப்படுத்தியே உள்ளது. உதாரணமாக தொழுகை நோன்பு என்பவற்றை உள்ளபடியே பின்பற்றும் நாம்,பொருளாதாரம் சார்ந்து அமைந்த ஸகாத், ஹஜ் வணக்கங்களை மேற்கொள்ளும் போது மட்டும் இவ்வளவு பணத்தை செலவு செய்யத்தான் வேண்டுமா?,தனது கையிருப்பு இல்லாமல் ஆகி விடும் அல்லது அப்பணம் கடைசியில் யார் கைககளுக்கு சென்றடகின்றது போன்ற எண்ண ஓட்டங்களை கொண்ட ஷைத்தானுடைய போராட்டம் அதிகமாவது யதார்த்தமே.

இந்த சஞ்சலப் போக்கை வெகு இலாபகமாக கையாளும் அதிகார வர்க்கத்தினர்,முகவர்கள் பற்றிய தப்பெண்ணத்தை மறைமுகமாகவோ நேரடியாகவோ மக்கள் மனதில் திணித்து, அவர்கள்தான் மக்களின் சேவகர்கள் என்று தன்னை முன்னிறுத்த பிரயத்தனம் செய்கின்றனர்.

மேலும் ஹாஜிகளை திணைக்களத்தில் பதிவு செய்வதற்காக 25,000/- முற்கொடுப்பனவு பணத்தை திணைக்களத்தின் ஹஜ் account இல் deposite செய்யப்பட்டு அதன் bank slip ஐ திணைக்களம் வந்து சமர்ப்பித்து அதற்கான receipt ஐ பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற புதிய நடைமுறாஇ ஹாஜிகளான பொது மக்களுக்கு விதியாக்கி இருக்கின்றானர்.
இவை உயர் நீதி மன்றா guideline இல் இல்லாத விடயம். மேலும் இதனால் ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்த பெரும்பாலான மக்கள் colomboஇலிருக்கும் MRCA department க்கு அலைக்கழிந்த செய்திகள் பல உள்ளான. இலகுவான முறையில் ஒழுங்குபடுத்த வேண்டிய இந்த ஹஜ்ஜை ஹாஜிகளின் நலன் என்ற பெயரில் சிக்கலுக்குள்ளாக்குவதால் மக்களே பல் க்‌ஷ்டங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

இவ்வாறு இலங்கை வங்கியில் வைப்பீடு செய்யப்படும்( 2600*25,000) 6 கோடி 50 லட்சம் பணத்தின் சுமார் 3 மாத காலம் அளவில் வங்கியில் நிலுவையாக இருக்கின்றாது. இதனால் குறிப்பிட்ட தொகைப் பணம் வட்டியாக அதிகரிப்பதற்கு ஹஜ்ஜுக்கு செல்லும் மக்களின்
பணம் மூலதனமாக்கப்படுகின்றது மட்டுமில்லாமல் அது யாரை சென்றடைகின்றாது என்பதும் மிகப் பெரிய கேள்வியாகும்.
இது மட்டுமில்லாமல் தெரிவாகும் ஒவ்வொரு முகவரும் தலா 25,000/-ரூபா வீதம் திணைக்களத்துக்கு செலுத்த வேண்டும் என்ற கட்டாய விதிப்பையும் மேற்கொண்டுள்ளாது. இதுவும் hajj guideline இல்லாத விடயமாகும். மேலும் hajj guideline இல் registration fee ஒரு கோட்டாவுக்கு த்லா 2000/- ரூபா என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.. இவை இரண்டையும் இந்த திணைக்களம் முகவர்கள் மூலமே அறவிடுகின்றனர்.
குறிப்பிட்ட இந்த தொகைகளும் ஹாஜிகளின் ஹஜ் கட்டணத்தில் உரித்தாக்கப்பட்டே முகவர்களால் மீள் அறவிடப்படும் .
ஆகவே 96 முகவர்களும் செலுத்தும் registration fee மொத்தம் 24, லட்சம் மற்றும் 2800 ஹாஜிக்குமான மொத்த கட்டணம் 56 லட்சம் ரூபாயும் அடங்கலான மொத்தம் 80 லட்சம் ரூபா மக்கள் பணமும் இதே போன்று வங்கியில் வைப்பு செய்யப்படுகிறது .இத்னுடைய அமானிதங்கள் பற்றிய கேள்வியும் ஹஜ் கமிட்டியயை நோக்கி நீழுகின்றது என்பதை மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.

இவற்றை புறாந்தள்ளி hajj guideline குறிப்பிடுவது போன்று ஹஜ் முகவர்களின் சேவையின் தரங்களை பிரித்தறிதல் மற்றூம் குற்றமிழைத்த முகவர்களை தண்டித்தல் ,பாரபட்சமின்றி இடை நிறுத்தல் என்பவற்றில் முழுக் கவனம் செலுத்தினால் இந்த ஹஜ் சேவையயை மென் மேலும் மேம்படுத்த முடியும்.
அதை விடுத்து ஒரு கண் துடைப்புக்காக enquiries நடத்துவதும் பாரபட்சமாக சிலரை நீக்குவதும் பெரிய முதலைகளை இறுதி நேரம் வரை காக்க விட்டு றுபிறகு அவர்களுக்கு முகவர் அந்தஸ்தை வழங்கவதும் மிகப் பெரிய அநீதியே!

மேலும் ஹஜ் கமிட்டியானது ஒவ்வொரு ஆண்டும் இந்த ஹஜ்ஜை நெறிப்படுத்தும் முகமாக உரிய time frameக்குள் செயற்பட வேண்டும் அறிவுறுத்தலை hajj guideline குறிப்பிட்டுள்ள போதும் ஏனோ அவர்கள் அலட்சியப் போக்கையே கையாளுகின்றனர். timeline for regulate the operators:

*ஒரு ஆண்டின் ஹஜ் முடிந்து 2 மாதங்களுக்கு பின் ற்பீஉல் அவ்வல் (அதாவது நடப்பு ஹஜ் ஆண்டை பொறுத்தவரை 2016 december) இல் புதிய முகவர் தெரிவுக்கான விண்ணாப்பம் கோரப்பட வேண்டும்.

**பின்னர் அடுத்து வரும் ற்பீஉல் ஆகிர்( 2017 january) மாதத்தில் முகவர்களுக்கான interview நடாத்தி முடித்திருக்க வேண்டும்.
***அதிலிருந்து 2 மாதம் கழித்து ஜமாத்துல் ஆகிர்(2017 march)மாதத்தில் முகவர்கள் தெரிவு செய்யப்பட்டு முகவர்களின் பெயர் பட்டியல் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும்.

அதன் பின்னர், முகவர்களின் கட்டணங்களின் நியயத் தன்மையயை ஆய்வின் மூலம் சரி கண்டு அவர்களது அனுபவ ஆற்றால்களின் அடிப்படையில் அவர்களுக்கு minimum கோட்டாக்களை பகிர்ந்தளிக்க வேண்டும் .
*****உரிய ஆண்டின் ஹஜ்ஜுக்கு 2 மாதங்களுக்கு முன்பதாக ரமழான் மாத்ததின் இறுதிக்குள் (2017 june) ஹாஜிகளின் கடவுச்சீட்டு மற்றும் ஹாஜிகள் முகவர் ஒப்பந்தங்கள் திணாஇக்களத்துக்கு கையளிக்கப் பட வேண்டும் அதன் பின் visa பதிவு MRCA மூலம் முன்னெடுக்கப்படும்.

timeline for regulate the pilgrims:
*ஒரு ஆண்டின் ஹஜ் முடிந்து 2 மாதம் அளவில் பின் ஸபர் (அதாவது நடப்பு ஹஜ் ஆண்டை பொறுத்தவரை 2016 november) இல் புதிய யாத்திரிகர் பதிவுக்கான விண்ணாப்பம் கோரப்பட வேண்டும்.

** ற்பீஉல் ஆகிர் (2017january) மாதத்தில் ஹஜ்ஜக்கா க விண்ணப்பித்தவர்களில் முதல் 2800 பேரும் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் ஹஜ் வாய்ப்பைதிணைக்களம் உறுதி செய்து உரிய ஹாஜிகளுக்கு அறிவிக்க வேண்டும்.

***றஜப் ஸஃபான்(2017april,may) மாதம் அளவில் மேலதிக கோட்டாக்களுக்கான விண்ணாப்பத்தை சவீதி அரசிடம் ஹஜ் கமிட்டி முன் வைப்பார்கள்.

**** ஹஜ்ஜுக்கு 3 மாத காலத்திற்கு முன் அதவது றமழானுக்கு (2017 june) முன்னர் தாங்கள் ஹஜ் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளீர்களா இல்லயா என்பதை எல்லா பதிவு செய்யப்பட்ட யாத்திரிகர்களுக்கும் அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்

மேற்கூறப்பட்ட நடைமுறைகளை உரிய நேரத்துக்கு செயற்படுத்த போதிய staff கள் இல்லை என்று சாக்குப் போக்கை சொல்லி நழுவுவது ஒரு அமைச்சின் கீழ் இயங்கும் அரச திணைக்களத்திற்கு பொருத்தமன்று.

மேலும் எந்தவொரு வருடமும் இந்த நடைமுறைகளை கடைப்பிடிக்காத இந்த ஹஜ் கமிட்டி, ஹாஜிகளின் நலன்களில் அக்கறை மிக்கவர்களாக தம்மை விளம்பரம் செய்வது நயவஞ்சகத்தனமானது.அதுமட்டுமில்லாமல் மேற்சொன்ன ஒழுங்கு முறைகளில் ஒரு முகவரை ஒரு யாத்திரிகர் தெரிவு செய்ய போதுமான அவகாசமான 3 மாத காலத்தையும் காலங்கலந்து விட்டது என்று கூறிஅபகரித்து கொள்கின்றனர்.
இதனால் திணைக்களம் விதிக்கும் deadline dateக்குள் தான் மக்களின் ஹஜ் தங்கியுள்ளது என்பது கேலிக் கூத்தான விடயமாகும்.

இலங்கையிலிருந்து ஹஜ்ஜு செல்லும் முகவ்ர்கள் list ஐ ஸஃபான்( 2017 may) மாதத்துக்கு முன் சவூதிக்கு அனுப்பாமல் இலங்கைக்கான மேலதிக கோட்டாக்களுக்கான விண்ணப்பத்தை கோர முடியாது ,இவாறிருக்க தாங்கள் சவூதிக்கு கடிதம் எழுதி இருக்கின்றோம் ,மேலதிக கோட்டாவுக்கு அமைச்சர் முயற்சிக்கின்றார் என் பத்திரிகைகளில் செய்தி வெளியிடுவது அதிகார வர்க்கத்தின் அரசியல் வங்குறோத்து நிலமையயை காட்டிகிறது.

சவூதியில் 2010 காலப் பகுதியில் மேற்கொள்ளாப்பட்ட அபிவிருத்தி வேலைகளின் நிமித்தம் 20 வீதமான கோட்டக்களை உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் அவ்வரசாங்கம் குறைத்திருந்தது.அதனை 2017 இவ்வாண்டு முதல் டுநிவர்த்தி செய்வ்தாக சவூதி அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து இலங்கைக்கான கோட்டா பழைய படி 2800 ஆக அதிகரித்தது. இதனையும் ஹஜ் அமைச்சரின் சாதனையாக மக்களுக்கு செயதியாக வெளியிடுவதும் உச்ச கட்ட அரசியல் ஆகும்.

யாத்திரிகர்களின் registration list இன் இரகசியத்தன்மையிலும் பாரிய ஊழல் நிகழ்ந்து கொண்டிருப்பதாக பொரும்பான்மையான முகவர்களால் நம்பப்படுகிறது; இதனை நிரூபிப்பதற்கு அல்லாஹுவின் மீதான சத்தியமே பெரும் பாலும் சாட்சியாக அமைகின்றாது.

சென்ற வருடம் june 8 அன்றே யாத்திரிகர்களின் list ஐ முகவர்களுக்கு வெளியிட்டிருக்க , அவற்றை அண்ணளவாக 2 மாதங்களுக்கு முன்பே குறிப்பிட்ட சில currepted முகவர்கள் , திணைக்கள ஊழியர்களிடம் ஏதோ ஒரு முறையில் பெற்றுக்கொண்டு யாத்திரிகர்களை தொடர்பு கொண்டு அவர்களை தன்னகப்படுத்திக் கொண்டதாகவும் ஆதங்கங்களை வெளிப்படுத்தப்பட்டன…

அது போன்று இவ்வாண்டும் மொத்தத்தில் ஹாஜிகள் list ஐ, புதிதாக தயாரித்திருக்கும் application இலேதான் upload பண்ணவோம் என்று கூறிய ஹஜ் கமிட்டியினர் கடந்த may 25 அன்றே முகவர்களின் பயன்பாட்டுக்கு அந்த application ஐ செயற்படுத்த் துவங்கினர். ஆனாலும் அதனை operate பண்ணும் திணைக்கள அதிகாரிகளின் அசமந்த போக்கால் பெருமாலானோருக்கான access ,june மாத ஆரம்பம் அளவிலே கிடைக்க பெற்றது .இன்னும் கிடைக்காமலும் சிலர் உள்ளனர்.

இது இவ்வாறு இருக்க கடவுச்சீட்டை ஒப்படைப்பதற்கான இறதி திகதியாக june 5 ஐ நிர்ணயித்திருந்தார்கள் என்பது முறையற்றதாகும். அதற்கு முன் ஹாஜிகள் list இ தர முடியாதென்றும் ,அவ்வாறான list கள் எதுவும் எங்களால் வெளியிடப்படவில்லை என ஹஜ் கமிட்டியினர் சத்தியம் செய்வது நகைப்புக்குரியது.

ஏனென்றால் இந்த system த்தை செயற்படுத்தும் முறையில் ஏற்படும் கோளாருகளுக்கு தனி மனிதர்கள் சத்தியம் செய்து விலக நினைப்பது முடியாது மாறாக ஹ்ஜ் கமிட்டி திணைக்கள உத்தியோகத்த்ர்கள் என ஒட்டு மொத்தமானவர்களுமே பதில் சொல்ல வேண்டும் .மேலும் அவ்வாறான registered haaji list திணைக்கள ஊழியர்கள் மூலம் 2500 ரூபாவிலிருந்து விற்கப்பட்ட உண்மையயை உஎவ்வாறு நிரூபிப்பது என்பதில் பல மன சாட்சி சார்ந்த சிக்கல்கள் முகவர்களிடம் காணப்படுகின்றன என்பது மேலதிக தகவல் ஆகும்.

ஒரு தேசத்தின் சொத்தை ” ஏகபோகம் “monopoly என்ற கோட்பாடு மூலம் தக்க வைப்பதனால் அதன் ஸ்திரத்தன்மையை பேண முடியும்..
உதாரணமாக நாட்டின் வளங்களான நீர், அலைக்கற்றை, மினசாரம் மற்றும் இன்னும் பல..
அது போன்றுதான் சவூதி அரசால் இலங்கைக்கு வழங்கப்படும் காட்டாவும் ஆகும். இதுவும் நாட்டின் வளம் குறிப்பாக முஸ்லிம் மக்களின் சொத்து ..
சிக்கலான தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் எனும் அடிப்படையிலும் monopoly என்ற த்த்துவ முறைமையை நெறிப்படுத்தும் மையப்புள்ளியில் அரசு இரிந்து கொண்டு தனியாருக்கு கையளிக்க முடியம்..

கும்கடந்த கால ஹஜ் வரலாற்றாஇ எடுத்து கொண்டால், கையை சுட்டுக் கொண்ட வேளைகளிலும் இலாபத்தை பிரதான விடயமாக்க கருதாமல் இந்த சேவையயை முகர்கள் மேற்கொண்டார்கள்.மேலும் தெரிந்தோ தெரியாமலோ மேற்கூறப்பட்ட சிந்தாந்த அடடப்படையில் இந் நாட்டின் ஒற்றை நுகர்வோரான முஸ்லிம்கள் மாத்திரம் பங்கு கொள்ளும் இந்தவியாபாரத்தினை அல்லது இந்த ஹஜ் சேவையை ,
, ஒரு சில புதிய முகவர்களும், ஆதிக்கம் செலுத்த விரும்பும் பெருத்த முதலாளிகளின் நிகழ்ச்சி நிரல்களில் இயங்கும் அமைச்சரும் ஹஜ் கமிட்டியும் இந்த சேவயை இலாபம் புழங்குமிடமாக்க் இன்று கடண்டதன் விளைவாக , அனுபவ்மிக்க முகவர்களையும் சேர்த்து இன்னும் பல முகவர்களை ஹஜ் சேவையிலிருந்து வெளித்தள்ளும் கைங்கரியத்தில் ,ஈடுபடுகிறார்கள் என்பது கவலையளிக்கிறது..

அத்னோடு நின்று விடாமல் இன்றைய நிலவும் இலங்கை அரசியற் சூழ் நலையில் பெரும் விவதங்களை ஏற்படுத்தியிருக்கும் privatization என்ற மையக் கருவில் இந்த தனியார் ஹஜ் முகவர் சேவையயையும் உள்வாங்குவதன் மூலம் இந்த முகவர்களை ஒழித்து கட்டி தன்க்கு தேவையான முகவர்களை unofficial ஆக வைத்துக் கொண்டு ,அவர்கள் மூலம் இந்த ஹஜ் பயணத்தை மறைமுகமாக முன்னெடுக்க பார்க்கின்றார்கள்.

அதன் மூலம் இலங்கை ஹஜ் பயணத்தை அரசாங்கம் மேற்கொள்கின்றது என்ற தோற்றத்தை ம்க்கள் மத்தியில் உருவாக்கி விலையயைக் குறைத்தோம் என்ற சாதனையயும் நிலை நிருத்தப் பார்க்கின்றனர். ஆனால் அவ்வாறாக விலயில் பெரும் வீழ்ச்சி ஏற்படாது என்பதை உணர்ந்தாலும் அரசாங்கத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது இயலாத காரியம் என்பதனால் மக்களும் அடங்கிப் போவார்கள்.

ஆகவே ஹாஜிகளைக் கவரும் இந்த புதிய உத்தியில் முகவர்களுக்கிடையே சண்டைகளும் காழ்ப்புணர்ச்சியும் றமழான் மாதம் என்றும் பாராமல் மேலோங்கிக் கிடக்கிறது.
றமழான் வந்தால் தராவீஹ் றக்கத்துக்களில இயக்கங்கள் முட்டிக் கொளவது போன்று , கடந்த 5 றமழான்கள் ஏதோ ஒரு முறையில் முகவர்களும் ஹஜ் கமிட்டியும் முட்டிக் கொண்டு நீதி மன்றம் செல்வது வாடிக்கையாகிவிட்டது..
மக்களும் யதார்த்தம் புரியாமல் முகவர்களை இழிந்து பேசுவதும் நடந்து கொண்டே இருக்கிறது..
அவரவர் செய்யும் தொழிலில் இடர்கள் ஏற்பட்டால் தான் அவரவருடைய நியாயம் புலப்படும்..
மேலும் காலத்திற்கு காலம் புதியதொரு முறை என்று சொல்லி ஹஜ் கமிட்டி நாற்றமெடுக்கும் குப்பைகளை திணிப்பதன் மூலந்தான் இப் பிரச்சினையின் கரு என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை..

சுருக்கமாக ஆட்சி மாற்றத்திற்கு ஏற்றாற் போல் காலத்திற்கு காலம் ஹஜ்ஜுக்கு பொறுப்பாக வரும் எல்லா அமைச்சர்களும் , மற்றும் ஹஜ் கமிட்டியும் அரசியல் லாபத்திற்காகவும் , காழ்ப்புணர்ச்சிகளோடும் ஹஜ் விடயத்தை அணுகுகின்றனர்.

ஆனால் , லாபம் மட்டும் இலக்காக முந்தைய காலங்களில் ஏமாற்று வித்தையில் கைதேர்ந்த முகவர்கள் மற்றும் இந்த ஹஜ் முகவர் தொழிலை தன்னகத்தே மட்டும் சுருக்கிக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படும் முகவர்கள் ,, ஏன் புதிதாக முகவர் அந்தஸ்த்தை பெற்ற ஒரு சில முகவர்களின் “”ஹஜ் கட்டணக் குறைப்பு விளம்பரத்தினூடே “”யாத்திரிகர்களைக் கவரும் உத்தியினால் இவ்வளவு காலமும் குறிப்பிட்ட தரத்திலான நிறைவான சேவையை வழங்கிய பெரும்பான்மையான முகவர்களும் கூட , போட்டி நிமித்தம் கட்டணத்தையும் குறைத்து தமது சேவையையும் தாழ்நிலைக்கு தள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்..

மேலும் ஹாஜிகளை முகவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் தரகர் தொழிலை கிராமங்கள் மற்றும் ஊர்கள் தோறும் தங்களை மெளலவி என்று பிரகடனப்படுத்திக் கொண்டவர்களே மேற் கொள்கின்றனர். மக்களும் மார்கத்தை கற்றவர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களை நம்பி அவர்கள் மூலமே முகவர்களை நாடுவது என்பது அன்று தொட்டு இன்று வரை நடைமுறையிலுள்ளது.
இதனால் ஈட்டும் வருமானத்தின் அளவில் அதிகமாக கவரப்பட்ட ஹாபிழ்கள்,மற்றும் மெளலவிகள் தமது படிப்பை முடித்த கையோடு உழைப்புக்காக ஏதேனும் செய்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படும் நிலயில் இந்த தரகு தொழிலில் எந்த வித invest உம் இல்லாமல் இறங்கி விடுகின்றனர். ஹாபுழ்களை மார்க்க அறிஞர்களாக பார்க்கும் எமது சமூகத்தில் அவர்களின் தரகு தொழில் மென்மேலும் வளர்ச்சியடைந்தே செல்கின்றது.

இதனடிப்படையில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட முகவருக்கு ஹாஜிகள் நேரடியாக சேருவது என்பதற்கான சாத்தியம் 75 வீதம் மிக குறைவு. அதுவும் தலை நகரைக் கொண்ட முகவர்களாக இருப்பின் 90 வீதம் brokers ஐ நம்பியே அவர்கள் இருப்பார்கள் என்பது தான் உண்மை.இதன் மூலம் ஒரு ஹாஜி அங்கீகரிக்கப்பட்ட முகவர நேரடியாக தெரிவு செவது என்பதல்லாமல் brokers களே முகவர்களை தேர்வு செய்யும் நிலை நடை முறையிலுள்ள்து.

மெளலவகளின் நற் பெயர் மற்றும் மக்களை ஈர்க்கும் திறமைகள் மூலம் அவர்களுக்கு சேரும் ஹாஜிகளை நல்ல தரமான முகவர்களை தெரிவு செய்து அனுப்பாமல் முகவர்களிடம் இருந்து கிடைக்கும் broker fee க்கு அமைகாவே மெளலவிகள் தமது ஹாஜிகளை முகவர்களுக்கு கொடுக்கின்றனர்.

recruitment agencies களின் brokers போன்று ஒரு ஹாஜிக்கு தலா 20, 000 இலிருந்து 30,000 வரை அறவிடப்பட்ட தரகுப் பணம் இப்போது 50,000/-ரூபா வரை demand செய்யும் அளவுக்கு வளர்ச்சி கண்டு விட்டனர் இந்த brokers கள்.
இந்த அறவீடும் ஹஜ் கட்டணத்தில் தவிர்க்க முடியாத பங்கை வகிக்கின்றது. என்பதனையும் மக்கள் விளங்கி கொள்ள வேண்டும்.

brokers களை கை விடுங்கள் என்று ஹஜ் கமிட்டியினர் முகவர்களை நோக்கி வேண்டு கோள் விடுப்பது உச்ச கட்ட வேடிக்கை. உண்மையில் இவ் வேண்டு கோள் ஹாஜிகளிடந்தான் முன் வைக்க பட வேண்டும்.
மாறாக ஒரு வியாபாரிக்கு brokers / agents இருப்பது இயல்பு .. இருப்பினும் minimum கோட்டா system இருக்கும் போது அவர்கள் முகவர்களின் control க்குள் ளேயே செயற்படுவர். ஆனால் இவ்வாறான் ஒரு புதிய system ஆல் brokers கடிவாளமில்ல குதிரைகள் போல் கட்டுப்பாடின்றி செயற்படுவதை யாராலும் control பண்ண முடியாது .

எமது மக்களிடையேயும் புதியதிற்கான மவுசு அடங்கியபாடில்லை..
புதிதாக ஏஏதும் வந்தால் நன்றாக இருந்தாலும் பழையதை விட்டுவிட்டு அவற்றை நுகர வேண்டுமென்ற ஒருவகையான புதியன புகுதல் என்ற நவீனத்துவ அடிமைச்சிந்தனைப் பக்கின் விளைவாக , கடந்த காலங்களிலும் தங்களை mrca இனால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் என்று பொய்யாக அடையாளப்படுத்திக்கொண்ட பல மெளலவிகளிடமும் , முகவர்களிடமும் தமது passport களை க் கொடுத்து சீரழிந்த வரலாறுகள் பல..

ஆகவே ஹாஜிகளுக்கு முகவர்கள் பற்றிய விழிப்புணர்வு ஊட்டல் என்பது முற்று முழுதாக சாத்தியமில்லை ,மாறாக கலந்த கால ஹஜ் களில் குற்றாமிழைத்தமுகவர்களை பத்திரிகைகள் வாயிலாக வெளிகொணரும் போது தான் மக்கள் ஓரளவுக்கேனும் முகவர்களை இனங்காண வசதியாக இருக்கும்.

அது இல்லாமல் selected operators ஐ அவர்களின் கட்டணங்கள் மூலம் அறிமுகப்படுத்துவது வாழ் நாளில் ஒரு முறை மாத்திரம் ஹஜ் செல்லும் ஒருவர் ஒரு நாளும் விளங்க முடியாது.
ஒரு ஹோட்டலுக்கு சென்று ப்ரோட்டாவும் பருப்பும் உண்டு விட்டு அந்த ஹோட்டலின் buriyani யின் தரத்தை எவ்வாறு விளங்க முடியாதோ ,அவ்வாறு உமறா சேவை செய்யும் முகவரின் ஹஜ் சேவயயை இனங்காணா முடியாது, ஆனால் ஹஜ் கமிட்டியோ நீங்கள் உம்றாசேவையயை கட்டாயம் மேற் கொள்ள வேண்டும்,அப் போது தான் உங்கள் தரத்தை மக்கள் விளங்கி கொள்வர் என்பது அவர்களின் புத்தக அறிவை காடுகிறது.

மக்களுக்கு உணவளித்தல், யாத்திரிகர்களுக்கு வழிகாட்டல், ஹஜ் கிரியைகளை இலகுவாக்குவதில் பங்களிப்பு செய்தல், பயண ஏற்பாடுகளை செய்தல், போன்ற பல்துறை தொழில்களை ஒருங்கிணைக்கும் வியாபாரமான இந்த முகவர்த் தொழிலை கண்ணியமானவர்களுக்கும் இஸ்லாமிய மற்றும் லோகாயுத கல்வித்தேர்ச்சி பெற்ற தலைமைத்துவ ஆளுமை மிக்கவர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற எண்ணம் இந்த ஹஜ் கமிட்டிக்கு வர வேண்டும் மேலும் அத்ன் பால் அமைந்த evaluating scheme களை கொண்டமைந்த புதிய சட்ட வரைபுகளை hajj guidelines திருத்தங்கள் மேற்கொண்டு இணைப்பதனால் தமக்கு வழங்கப்பட்ட அமானிதப் பொறுப்புகளை சரிவர நிறாஇவேற்றூம் தக்வா தாரிகளாக மாற முயற்சிக்க முடியும்
எந்தவொரு வியாபாரத்தையும் ,பொறுப்பையும் மன சாட்சிக்கு உட்பட்டு இஃலாஸ் ஆக நிறைவேற்றினால் வாழ்க்கையில் “நிஃமத்தையும் தாண்டி ” றஹ்மத்தை அடைய முடியும்..

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers