பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்றத்தின் வாசற்பகுதியில் கத்தியுடன் நடமாடிய சந்தேக நபர் ஒருவரை பிரித்தானிய காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
இன்று முற்பகல் 11.10மணியளவில் குறித்த நபர் சத்தமிட்டவாறு கத்தியுடன் பாராளுமன்ற வாயிலை நோக்கிசென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளாh என காவல்துறைதகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட நபர் கறுப்புநிற காற்சட்டையும் சாம்பல்நிற மேற்சட்டையும் அணிந்திருந்த 30 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் பயங்கரவாத உள்நோக்குடன் செயற்பட்டாரா என்பது தொடர்பில் ஸ்கொட்லாண்ட் யார்ட் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Add Comment