இலங்கை மலையகம்

போகம்பர சிறைசாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் முற்போக்கு கூட்டணியினர் பார்வையிட்டுள்ளனர்.

கண்டி தும்பர போகம்பர சிறைசாலையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு கீழ் தடுத்து வைக்கபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைதலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன்¸ தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அடங்கிய குழு சந்தித்து அவர்களின் விடுதலை தொடர்பிலும் அவர்களின் பிரச்சனைகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.

கிட்டதட்ட 200 தமிழ் அரசியல் கைதிகள் முன்னர் அங்கு  இருந்ததாகவும் இவர்களில் புனர்வாழ்வு விடுதலைக்கு பின்னர் தற்போது 112 கைதிகள் இருப்பதாகவும் இவர்களில் 16 பேர் இந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் தொடர்பாக தெரிவித்த  வே.இராதாகிருஸ்ணன்¸

இன்றைய திளத்தில் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக வருகை தந்து அவர்களை பார்வையிட்டோம் எனவும்  தமிழ்  அரசியல் கைதிகள் தங்களது துன்ப துயரங்களை தம்மிடம் முறையிட்டனர் எனவும் தெரிவித்தார்.

இலங்கையின் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் தாங்கள் கைது செய்யபட்டதாகவும். யுத்தம் முடிந்த பின்னர் அரசியல் கைதிகளின் விடுதலை புணர்வாழ்வு செயற்பாடுகளில் தாங்கள்  உள் வாங்கபடவி;லலை எனவும். தாங்கள் ஒவ்வொருவருக்கும் எட்டு தொடக்கம் 10 வரையிலான வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வரவதாகவும். இதன் தீர்ப்புக்கள் ஒவ்வொரு விதமாக வருவதால் தாங்கள் எவ்வளவு காலம் சிறை வாழ்க்கைளை அனுபவிக்க போகின்றோம் என்று தெரியவில்லை எனவும் கைதிகள்  மிகவும் துன்பத்துடன் தெரிவித்தனர் என அவர் தெரிவித்தார்.

இந்த  விடயத்தை நீதி மற்றும் புத்தசாகன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்களிடமும்¸ ஒரு வருடம் இரண்டு வருடம் சிறை தண்டளை பெற்றவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதனுடனும் கதைத்து ஒரு முடிவினை பெற்றுதர நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்ததாகுவும் அவர் தெரிவித்தார்.

இந்த விஜயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவிக்கையில் தற்போது இருக்கின்ற புணர்வாழ்வினை அடிப்டையாகக் கொண்டு வழக்குகளை துரிதபடுத்தி அல்லது ஒரு பொது மன்னிப்பினை வழங்கி தங்கiளை விடுதலை செய்ய ஏற்பாடுகளை செய்து தருமாறு கைதிகள் கோரியதாக தெரிவித்தார்.

அதேபோல் இந்த சிறைச்சாலைக்குள் இருக்கும் வரைக்கும் தங்களது பாதுகாப்பினை உறுதிபடுத்துமாறும் அவர்கள் கோரிக்கை முன் வைத்தனர் எனவும்  அவர் தெரிவித்தார்

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers