குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
கடும்போக்காளர்களின் பிடியில் அரசாங்கம் சிக்காது என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஓர் சிறிய கடும்போக்காளர் குழுவொன்று செயற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சிப்போருக்கு எதிராக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெலை அவரது இல்லத்தில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment