இலங்கை பிரதான செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு நேரிடலாம் – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

பல்கலைக்கழக மாணவர்கள் ஆயுதம் ஏந்துவதற்கான சூழ்நிலை உருவாகும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரையில் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலை உருவாகும் என அரசாங்கத்திற்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும், அரசாங்கம் அதனை கண்டு கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இச்த நடவடிக்கைகளினால் ஆயிரக் கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட அரசாங்க மருத்துவர் ஒருவர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கும் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply