உலகம்

சவூதி அரேபியாவின் நடவடிக்கைக்கு கட்டார் கண்டனம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சவூதி அரேபியாவின் நடவடிக்கைக்கு கட்டார் அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. கடல், வான் மற்றும் தரை வழி பாதைகளை திறப்பது குறித்த நிபந்தனைகள் தொடர்பில் சவூதி அரேபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் வெளியிட்டிருந்த கோரிக்கையை சவூதி அரேபியா நிராகரித்துள்ளது.

சவூதி அரேபியாவின் இந்த நடவடிக்கையானது சர்வதே கொள்கைகளுக்கு புறம்பானது என கட்டார் வெளிவிவகார அமைச்சர்  ஷேக் மொகமட் அல் தாணி (heikh Mohammed al-Thani ) தெரிவித்துள்ளார்.

கட்டார் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்தி சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரெய்ன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கட்டாருக்கு எதிராக தடைகளை விதித்திருந்தன

Add Comment

Click here to post a comment

Leave a Reply