இந்தியா பிரதான செய்திகள்

கயானாவில் இருந்து ஏவப்பட்டது இஸ்ரோவின் ஜிசற்-17 செயற்கைகோள் – வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது:-

தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்காக இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைகோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியன் ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

தொலைத்தொடர்பு, டிடிஹெச் (DTH) சேவை மேம்பாட்டுக்காக ஜிசற்-17 செயற்கைகோளை லத்தீன் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவிலிருந்து, ஏரியன்-5 ரொக்கெட் மூலம் இஸ்ரோ அனுப்பியது.

இன்று அதிகாலை 2.29 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் ஜிசற் -17 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

அதிக எடைகொண்ட இந்த ஜிசற் -17 செயற்கைக்கோள், அனுப்புவதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்பு இன்னும் இஸ்ரோ ஏவுதளத்துக்குக் கொண்டுவரப்படவில்லை என்பதால், ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து ஜிசற்-17 செலுத்தப்பட்டது.

ஜிசற்-17 செயற்கைகோள் 3,477 கிலோ எடைகொண்டது. இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். இது இந்தியாவின் 18வது தொலைத்தொடர்பு மேம்பாட்டு செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers