இலங்கை பிரதான செய்திகள்

அதிகாரப்பகிர்வுக்கு சு.க.வும் ஐ.தே.க.வும் இணங்கியுள்ளன: கிளிநொச்சியில் கிரியெல்ல :-


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் அதிகாரப் பகிர்வுக்கு இணக்கம் தெரிவித்துள்ளன என உயர்­கல்வி மற்றும் நெடுஞ்­சா­லைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரிவித்தார்.

கிளி­நொச்­சியில் யாழ்.பல்­க­லைக்­க­ழக வளா­க­மாக விவ­சாய, பொறி­யியல் பீடங்­களின் வச­தி­களை மேம்­ப­டுத்தும் திட்­டத்தின் கீழ் விவ­சாய பீடத்தில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள மாணவர் திறன் அபி­வி­ருத்தி கட்­ட­டத்­தொ­கு­தியும் பொறி­யியல் பீடத்­திற்­கான இரண்டு மாடிக்­கட்­ட­டமும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைய­ளிக்­கப்­படும்  நிகழ்வு நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்­றது.

இந்­நி­கழ்வில் அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இலங்கை வரலாற்றில்  முதற் தடவையாக பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைமைகளின் ஒத்துழைப்புடன் அரசியல மைப்பிற்கான செயற்பாடுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதாகவும் அவர் கூறினார்.

மேலும் தேசிய அர­சாங்­கத்­தினை ஆட்­சிக்கு கொண்டு வந்த தமிழ் மக்­க­ளுக்கு நன்­றி. எவ்­வி­த­மான அர­சியல் தலை­யீ­டு­களும் இடம்­பெ­ற­மாட்­டாது என்றும் அவர் தெரிவித்தா்ர.

நாங்கள் பாட­சா­லைக்கு செல்லும் காலத்தில் எங்­க­ளுடை பெற்றோர் யாழ்ப்­பாண மாண­வர்கள் போன்று கல்­வியைப் பயி­லுங்கள் என்று கூறிக்­கொண்டே இருப்­பதாகவும் அவர் நினைவுபடுத்தினார்.

கடந்த காலத்தில் இரண்டு புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. 1972ஆம் ஆண்டு முதற்­த­ட­வை­யாக புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. 1978ஆம் ஆண்டு இரண்­ட­வாது தட­வை­யாக புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த இரண்டு சந்­தர்ப்­பங்­க­ளிலும் தமிழ் அர­சியல் கட்­சிகள் அதில் பங்­க­ளிப்­புக்­களைச் செய்­தி­ருக்­க­வில்லை என்றும் அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் செயற்­பா­டு­க­ளின்­போது தமிழ் அர­சியல் கட்­சிகள் புறக்­க­ணிப்­பி­னையே செய்­தி­ருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்­வா­றி­ருக்­கையில் வர­லாற்றில் முதற்­த­ட­வை­யாக பாரா­ளு­மன்­றத்தில்   வட்­ட­மே­சையில் அமர்ந்து புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான புது வரை­பொன்றை தயா­ரிக்கும் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்ளதாகவும் அவர் பேசினார்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு சம்­மதம் தெரி­வித்­துள்­ளன. முதற்­த­ட­வை­யாக பாரா­ளு­மன்­றத்­தினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சி­களின் பங்­கேற்­புடன் சிங்­கள, தமிழ், முஸ்லிம் தலை­மை­களின் பங்­கேற்­புடன் அர­சி­ய­ல­மைப்­பிற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ன­றன என்றும் சுட்டிக்காட்டினார்.

1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்­திரம் அடைந்­த­போது ஆசிய மற்றும் உலக நாடு­களில் உள்ள அனை­வரும் இலங்­கையை முன்­மா­தி­ரி­யாக பார்த்­தார்கள். உதா­ர­ண­மாக சிங்­கப்பூர், மலே­சியா போன்ற நாடுகள் எங்­க­ளு­டைய இலக்கு இலங்­கை­யைப்­போன்று வரு­வ­தாகும் என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் 1950களில் இன­வாத அர­சியல் தலை­தூக்­கி­யது. அதி­கா­ரத்­தினை தம­தாக்­கு­வதே பிர­தான இலக்­காக இருந்­தது. யாரும் விரும்­பாத ஆயுத கலா­சாரம் தோற்றம் பெற்­றது. தற்­போது முப்­பது வரு­ட­காலம் வீணாக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது இன­வாத அர­சியல் சம்­பந்­த­மாக அனைத்து கட்­சி­களும் தம்மை மீட்­டிப்­பார்த்து ஒரு முடி­வுக்கு வந்­துள்­ளன.

அத­ன­டிப்­ப­டை­யி­லேயே அனைத்து கட்­சி­களின் பிர­தி­நி­தி­களும் வட்­ட­மே­சைக்கு வந்­துள்­ளார்கள் என்று . நான் நினை­கின்றேன் அர­சி­ய­ல­மைப்பின் இடைக்­கால அறிக்கை எதிர்­வரும் ஆகஸ்ட், செப்­டம்­பரில் சமர்ப்­பிப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்ளதாகவும் லக்ஸ்மன் கிரியல்ல மேலும் தெரிவித்தார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.