குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாரவல பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் குறித்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் நேற்றைய தினம் நடத்திய சுற்றி வளைப்பு தேடுதலின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 16 போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாத்தன்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment