Home இலங்கைநயினாதீவில் பேருந்து சேவை இன்றி மக்கள் தவிப்பு

நயினாதீவில் பேருந்து சேவை இன்றி மக்கள் தவிப்பு

by admin

நயினாதீவில் சேவையில் ஈடுபட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பழுதடைந்துள்ளமையால் , பேருந்து சேவைகள் இன்றி பலரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.
நயினாதீவில் ஒரு ஒரே பேருந்து , தீவினுள் போக்குவரத்து சேவையில் இதுவரை காலமும் ஈடுபட்டு வந்தது. நயினாதீவிற்கு வேலைக்கு செல்வோர் , சுற்றுலா செல்வோர் ஊரவர்கள் என பலரும் தீவினுள் தமது போக்குவரத்திற்கு பேருந்து சேவையையே பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் சேவையில் ஈடுபட்டு வந்த பேருந்து பழுதடைந்துள்ளமையால் , பேருந்து சேவை இன்றி பலரும் கால் நடையாகவே தமது பயணத்தை தொடர வேண்டிய நிலைமை காணப்படுகிறது.
எனவே விரைந்து பேருந்து சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More